கிருஷ்ணகிரி காவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து வினாயகர் திருக்கோவிலில் வாசல் கதவு வைப்பதற்கான சிறப்பு பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி காவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து வினாயகர் திருக்கோவிலில் வாசல் கதவு வைப்பதற்கான சிறப்பு பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரி காவலர் குடியிருப்பு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்து வினாயகர் மற்றும் ஸ்ரீ துர்க்கையம்மன் திருக்கோவிலின் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று ஸ்ரீ முத்து வினாயகர் திருக்கோவிலின் வாசல் கதவு வைக்கும் நிகழ்வுக்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் துக்காரம் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் திருக்கோவில் பூசாரி சுப்பிரமணி மற்றும் நாரயணன் ஆகியோரின் சிறப்பு பூஜைகளும் அலங்கார தீபா அலங்கார பூஜைகளும் நடத்தப்பட்டு திருக்கோவிலுக்கு வாசல் கதவுகள் அமைக்கப்பட்டது.
மேலும் இந்த விழாவில் ஆரியபவன் ஹோட்டல் உரிமையாளர் நடராஜன், டி.சி.ஆர். முருகேசன், நகர்மன்ற உறுப்பினர்களான செந்தில்குமார், பாலாஜி. முன்னாள் அறங்காவலர் தலைவர் லட்சுமி நாராயணன் மற்றும் திருக்கோவில் நிர்வாகிகளான ராசு, ஜெகநாதன், கிருபாகரன், அசோக், சினிவாசன், ஆட்டோ செந்தில்குமார், சிதம்பரம். உமாபதி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
