மேடவாக்கத்தில் மதுபானக்கூடத்தை மூட வேண்டும் என அடியாட்களை அனுப்பி மிரட்டும், மற்றொரு பார் உரிமையாளர்.!
சென்னை
மேடவாக்கத்தில் மதுபானக்கூடத்தை மூட வேண்டும் என அடியாட்களை அனுப்பி மிரட்டும், மற்றொரு பார் உரிமையாளர் சிசிடிவி காட்சிகளுடன் காவல் நிலையத்தில் புகார்.
சென்னை பள்ளிகரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பெரும்பாக்கம் மெயின் ரோடு மேடவாக்கத்தில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது.
மதுபானகூடம் இருக்கும் இடம் விஜயராணி என்பவருக்கு சொந்தமானது, வாடகை ஒப்பந்தம் செய்து மதுபான கூடத்தை எவ்வித பிரச்சனையுமின்றி நல்ல முறையில் பல வருடங்களாக நடத்தி வருகிறார்.

இந்த மதுபான கூடத்தை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அதே பகுதியில் பல மதுபான கடைகளை நடத்தி வரும் பார் உரிமையாளர் பிரபாகரன் என்பவர் இடத்தின் உரிமையாளரிடம் அதிக முன்பணம், வாடகை தருவதாக கூறி வெங்கடேசனை காலி செய்ய சொல்லுமாறு சில நாட்களாக வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் வெங்கடேசன் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் இடத்தை காலி செய்யாமல் மதுபான கூடத்தை முறையாக வாடகை செலுத்தி நடத்தி வருவதால் நீதிமன்றத்தை அணுகி முறையிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இடத்தின் உரிமையாளர் விஜயராணி மற்றும் மற்றொரு பார் உரிமையாளரான பிரபாகரன் தனது ஆதரவாளர்களை மதுபானகூடத்திற்கு அனுப்பி நேற்று 9.30 மணியளவில் பார் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, மதுபானகூடத்தை மூட வேண்டும் என கத்தி கூச்சலிட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் போலீஸார் வந்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வெங்கடேசன் பள்ளிகரணை காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் பள்ளிகரணை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்
S S K
