தீப்பற்றி எரிந்த சரக்கு இரயில், குடியிருப்புகளில் சிலிண்டர்களை அகற்றிய பொதுமக்கள்? !
திருவள்ளூர்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் மிக மோசமான தீவிபத்து ஏற்பட்டுள்ளது. டீசல் ஏற்றிச் சென்ற ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து வருகிறது.
தீயை அணைக்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்தும் கேஸ் சிலிண்டர்கள் அகற்றப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் மிக மோசமான ஒரு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சரக்கு ரயில் சென்னை மணலியில் இருந்து டீசல் ஏற்றி வந்ததாகச் சொல்லப்படுகிறது. திருப்பதி நோக்கி சென்ற சரக்கு இரயில் திருவள்ளூர் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரெனத் தீவிபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பிறகு அது மெல்ல மெல்ல மற்ற வேகன்களுக்கும் பரவியதால் அபாயம் ஏற்பட்டுள்ளத.. தீ விபத்து காரணமாக அங்குப் பல மீட்டர் உயரத்திற்குத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. ரயிலில் ஏற்பட்ட அதிக உராய்வு காரணமாக தீ பற்றியதாகச் சொல்லப்பட்டாலும் இது குறித்து உறுதியாக தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. தீ விபத்து காரணமாக அப்பகுதியில் ரயில் சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் திருவள்ளூர் ஆட்சியர் பிரதீப், எஸ்பி சீனிவாசப் பெருமாள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
விபத்து குறித்த தகவல்களை எஸ்பியிடம் ஆட்சியர் பிரதீப் கேட்டுத் தெரிந்து கொண்டார். தீயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தீ விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.