வெடி விபத்தில் பலியானோருக்கு மலர் தூவி மரியாதை. !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்த்த மூன்று பேரின் நினைவு அஞ்சலியில் கலந்துக்கொண்ட சமூக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் டாக்டர் சந்திரமோகன் இறந்து போனவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ரவியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு ஏதாவது ஒரு அரசு பணி வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை, காட்டி நாயனப்பள்ளி முருகன் கோவில் சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெடிவிபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை உள்ளிட்ட மூன்று பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி நடைப்பெற்றது.
இந்த நினைவு அஞ்சலியில் கலந்துக் கொண்ட சமூக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் வெடி விபத்தில் இறந்து போன ரவி, அவரது மகன் ருத்தி, மகள் ருத்திகா, ஆகியோரின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் பேசிய டாக்டர் சந்திரமோகன்,
கிருஷ்ணகிரி பழையபேட்டை காட்டுநாயனப்பள்ளி முருகன்கோவில் சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது இந்த பயங்கர வெடி விபத்தில் 9 பேர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர்.
இந்த வெடி விபத்தில் பலியான குடும்பத்திற்கு அரசு சார்பில் இழப்பீடும் வழங்கப்பட்டாலும் இந்த வெடி விபத்தில் பலியான ரவி, அவரது மகன், மகள் ஆகியோர் பரிதாபமாக இறந்து போனதால் ரவியின் குடும்பத்தினர் மிகவும் வறுமை நிலையில் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். போதிய வருமானம் இன்றி வசித்து வரும் ரவியின் குடும்பத்தில் உள்ள சுறாவிற்கு அரசு துறையில் ஏதாவது ஒரு வேலை வழங்கிட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ