திப்பணம்பட்டியில்  மதநல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா .!

தென்காசி

திப்பணம்பட்டியில்  மதநல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா .!

திப்பணம்பட்டியில்  மதநல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா 

நலத்திட்ட உதவிகள்
வே.ஜெயபாலன், பழனி நாடார் எம்.எல்.ஏ. வழங்கினர்

தென்காசி, டிச - 28

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியில் நடைபெற்ற மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன்,  தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார்  ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் மத நல்லிணக்க கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழாவையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  சி.எஸ்.ஐ. கிறிஸ்து உயிர்தெழுதலின் ஆலயம் அருகே நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை 
வே.ஜெயபாலன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.பழனிநாடார் ஆகியோர் பங்கேற்று 500 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை  கீழப்பாவூர் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜே.கே.ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், கீழ்பாவூர் வட்டார காங்கிரஸ் தலைவர் கே.பி.குமார் பாண்டியன், கல்லூரணி ஊராட்சி தலைவர் ராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் மேரி மாதவன், தொழிலதிபர் சேவியர்ராஜன், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் பாண்டியராஜா, ராஜேஷ்,பவுண்துரை, தங்கராஜ், தவசிமுத்து தங்கராஜ், ஜாண் சாமுவேல், வேதமுத்து,சுந்தர்,வில்லியம்ஸ்,, ஐயாத்துரை,கிருபாகரன,ஜாண்சன்,சாமுவேல் அசரியா, வினைதீர்த்தான்,செல்வன், சுப்புராஜ், போஸ் முருகேசன், ஜோசப் ரவீந்திரன், ஜோதி பாண்டியன், டேவிட் ஞானசிங்கம், சுந்தர், யோசேப்பு  தங்கராஜ், ஏசுதாசன்,மகிழ்ராஜ்,ஞானப்பிரகாசம், தேவராஜன் செல்வராஜ்,மாதவன், சாமுவேல், பாலசிங், எழில்,பாக்கியராஜ் சீனிவாசகம்.ஜோசப் ரத்தினம், ஞானபொன்ஸ்டீபன், மாவட்ட கலை இலக்கிய அணி மாரியப்பன், மாவட்ட சுற்று சூழல் அணி சமுத்திர பாண்டியன், ஒன்றிய பொறியாளர் அணி தங்கராஜ், வின்சென்ட் கலந்து கொண்டனர். முடிவில் ஜான் வின்சென்ட் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்