எம்.ஜி.ஆர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்க சென்ற செங்கோட்டையன். ! அதிமுகவினர் செய்த காரியத்தால் ஏமாற்றம் அடைந்தார்.!

கோவை

எம்.ஜி.ஆர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்க சென்ற செங்கோட்டையன். ! அதிமுகவினர் செய்த காரியத்தால் ஏமாற்றம் அடைந்தார்.!

தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்பு செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன், இன்று மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.

அப்போது சிறுமுகை பெத்திக்குட்டை பகுதியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு செங்கொடையன் மாலை அணிவிக்க சென்றார். ஆனால் இந்த சிலை அதிமுக சார்பில் அமைக்கப்பட்டது என்பதால், தவெகவினர் மாலை அணிவிக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் செங்கோட்டையன் மாலை அணிவிக்க முடியாதபடி, சிலைக்கு பூட்டு போட்டு சென்றனர். இதேபோல் அங்கிருந்த அண்ணா சிலைக்கும் செங்கோட்டையன் மாலை அணிவிக்க சென்றார். ஆனால், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க தவெகவினர் அனுமதி பெறாததால் அண்ணா சிலையும் பூட்டப்பட்டு இருந்தது.

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படங்களுடன்

செங்கோட்டையன் பாஜகவில் இணையலாம் எனக் கூறப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக நவம்பர் மாத இறுதியில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தார். தவெகவில் இணைந்த போதிலும் தனது சட்டைபையில் ஜெயலலிதா படமே தொடர்ந்து வைத்து வலம் வருகிறார். அதேபோல, ஜெயலலிதா நினைவு நாளிலும் செங்கோட்டையன், மரியாதை செலுத்தினார்.

அதிமுகவில் இருந்து நீக்கபட்டாலும் தனக்கு அடையாளம் கொடுத்த அதிமுக தலைவர்களை மறக்க முடியாது எனக் கூறி வருகிறார் செங்கோட்டையன். கோபி செட்டி பாளையத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்திலும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படங்களுடன் போர்டு வைத்து இருந்தார். இதற்கு அதிமுகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

மாலை அணிவிக்க மறுப்பு

இந்த நிலையில்தான், தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்பு செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன், இன்று மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இதற்காக கார் மூலமாக மேட்டுப்பாளையத்திற்கு செங்கொட்டையன் வந்து கொண்டிருந்தார். அப்போது சிறுமுகை பெத்திக்குட்டை பகுதியில் செங்கோட்டையனுக்கு தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, அங்கு இருந்த எம்.ஜி.ஆர் சிலைக்கு தவெகவினர் மற்றும் செங்கொடையன் மாலை அணிவிக்க சென்றனர். ஆனால் இந்த சிலை அதிமுக சார்பில் அமைக்கப்பட்டது என்பதால், தவெகவினர் மாலை அணிவிக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் செங்கோட்டையன் மாலை அணிவிக்க முடியாதபடி, சிலைக்கு பூட்டு போட்டு சென்றனர்.

செங்கோட்டையன் அதிர்ச்சி

இதனால், செங்கோட்டையன் ஏமாற்றம் அடைந்தார். சரி அங்கேதான் இப்படி என்றால், மேட்டுப்பாளையத்தில் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது செங்கோட்டையனுக்கு.. அதாவது மேட்டுப்பாளையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க செங்கொட்டையன் சென்றார்.

ஆனால், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க தவெகவினர் அனுமதி பெறாததால் அண்ணா சிலையும் பூட்டப்படு இருந்தது. இதனைத்தொடர்ந்து அண்ணா சிலை முன்பாக அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த அண்ணா புகைப்படத்திற்கு செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் செங்கோட்டையன் பங்கேற்றார்.