தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000! பெண்களுக்கு 2 குட் நியூஸ்.!
மதுரை
மதுரை செட்டிக்குளம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு விநியோக நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு கொடுத்த அவர், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அப்டேட் ஒன்றையும் கொடுத்தார். அங்கு குழுமியிருந்த பெண்கள் மத்தியில் அமைச்சர் பி.மூர்த்தி பேசும்போது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்களில் தகுதியானவர்கள் இருப்பின் அவர்களுக்கும் ரூ.1000 கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்துக
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஆயிரம் ரூபாய் கொடுப்பதை மாதம் 2000 ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். அதேபோல், பொங்கல் பரிசுத்தொகை 3000 ரூபாய் தமிழ்நாடு அரசு கொடுப்பதை, முழுமனதார வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைமை புறக்கணிக்கிறது
தொடர்ந்து பேசிய கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று நான் பலமுறை கூறி வருகிறேன், ஆனால் கட்சி தலைமை என்னுடைய கருத்தை நிராகரித்து வருகிறது என கூறினார். அவர்களுக்கு காங்கிரசை பலப்படுத்தும் எண்ணம் இல்லை என்றும் வெளிப்படையாக கூறினார். தமிழக வெற்றி கழகத்திற்கு என்று தனி ஆதரவு உள்ளது, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை நாம் பார்க்க முடிகிறது என கூறிய கார்த்தி சிதம்பரம், அதெல்லாம் வாக்காக மாறுமா? என்று தெரியவில்லை என்றும் கூறினார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி
சட்டப்பேரவை தேர்தல் குறித்து பேசிய கார்த்தி சிதம்பரம், "காங்கிரஸ் திமுக கூட்டணிக்குள் நெருக்கடி என்பது இல்லை பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது இப்போ நேத்து சேர்ந்த கூட்டணி இல்ல, காலம் காலமாக இருக்கக்கூடிய கூட்டணி தான். நீண்ட நாட்களாக காங்கிரஸ் ஆட்சிக்கு வராததால், உட்கட்சியில் குமுறல் இருக்கத்தான் செய்யும். அதை அனைவரும் வெளிப்படுத்துகின்றனர். அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை திமுகவை தவிர வேறு யாரிடமும் பேசவில்லை. பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யுடன் தனிப்பட்ட முறையில் பேசி இருப்பார். அவர் காங்கிரஸ் கட்சியால் நியமிக்கப்பட்ட நபர் இல்லை, ஒட்டு மொத்தமாக காங்கிரஸ் கட்சிக்காக பேசக்கூடிய நபராக நியமிக்கவில்லை." என்றும் பேசினார்.
