பிரகாசி மிஷனரி பேராயத்தின் தலைவர் ஜெயசிங் தமிழகத்தில் கிறிஸ்தவ போதகர்கள் நல வாரியம் அமைக்க உறுதியளிக்கும் கட்சிக்கு வருகின்ற சட்ட மன்றத் தேர்தலில் ஆதரவு. !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த எழும்பி பிரகாசி மிஷனரி பேராயத்தின் தலைவர் ஜெயசிங் தமிழகத்தில் கிறிஸ்தவ போதகர்கள் நல வாரியம் அமைக்க உறுதியளிக்கும் கட்சிக்கு வருகின்ற சட்ட மன்றத் தேர்தலில் தாங்கள் ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் எழும்பி பிரகாசி மிஷனரி பேராயத்தின் சார்பில் வருகின்ற சட்ட மன்றத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பேராயத்தின் தலைவர் ஜெயசிங் வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் எழும்பி பிரகாசி பிஷனரி பேராயகத்தின் சார்பில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஜெயக்குழுவை ஏற்படுத்தி இதன் நிர்வாகிகளை நியமானம் செய்ய உள்தாகவும், குறிப்பாக தமிழகத்தில் எழும்பி பிரகாசி மிஷனரி பேராயத்தில் 1 தந்தை பேராயர், 4 பிரதம பேராயர்கள், 117 பேராயர்கள் மற்றும் 8364 போதகர்களும் உள்ள இந்த திருச்சபையில் தமிழ்நாட்டில் உள்ள 83 லட்சம் கிறிஸ்தவ மக்களுக்கான உரிய அங்கீகாரம் கிடைத்திட வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் கிறிஸ்தவ போதகர்கள் நல வாரியம் அமைத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளோம். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளிக்கும் கட்சிகளுக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் ஆதரவளிக்க இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கிகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவிப்போம். அப்போது எந்த கட்சி எங்களுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் அந்த கட்சிக்கு எங்களுடைய எழும்பி பிரகாசி மிஷனரி பேராயக்கம் ஆதரவாக செயல்படும் என்று உறுதியளித்தார்.
அப்போது பிரதம பேராயரும், அகில இந்திய பொது செயலாளருமான டேனியல் சக்கரவர்த்தி, மாநில தலைவர் எபி ராபர்ட், மாநில பொருளாளர் பால் ரவிகுமார், மாநில துணைச் செயலாளர் மாது ஜெயராஜ் மற்றும் போதகர்களான பிரேமா மலர், ராஜாகிளி, ராஜேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
