இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 79 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.!
இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 79 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மத்திய/ மாநில அரசு அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்தனர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சிறப்பாக வேலை செய்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதன்படி, கீழக்கரை வருவாய் துறையில் கீழக்கரை வட்டாட்சியர் ஜமால் முஹம்மது, கீழக்கரை இளநிலை ஆய்வாளர் கண்ணன், அரசு மருத்துவமனை டாக்டர் பிரியதர்ஷினி (D.C.H) குளபதம் கிராம நிர்வாக உதவியாளர் நெய்னா முகம்மது உட்பட பலருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஏற்கனவே கீழக்கரை வட்டாட்சியராக பதவி வகித்து பணி மாறுதலில் சென்ற வீர ராஜா, மற்றும் தமீம் ராஜா களிமண் குண்டு கிராம அலுவலர் மாரிமுத்து ஆகியோரும் நற்சான்று பெற்றனர்.
கீழக்கரையில் அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி பள்ளி கல்லூரிகள், அகமது தெரு அஸ்வான் சங்கம், அரபி மதரஸாக்கள் உட்பட பல இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
செய்தியாளர்
அப்துல் காதர்