மின்மாற்றியை கழற்றி அதில் இருந்த சுமார் ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான காப்பர் பொருட்களை திருடிச் சென்ற கும்பல். !

திருப்பத்தூர்

மின்மாற்றியை கழற்றி அதில் இருந்த சுமார் ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான காப்பர் பொருட்களை திருடிச் சென்ற கும்பல். !

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் கிராமத்தில் உள்ள பெரியகொல்லி வட்டம் பகுதியில் வழக்கறிஞர் ஏ.சி. தேவகுமார், அருள், சக்கரவர்த்தி, ஞானசேகர், சுந்தரம் ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலங்களுக்கு மின்சாரம் செல்ல அங்கு மின் மாற்றி பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த மின் மாற்றியில் சுமார் 10 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் செல்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் மின்சாரம் தடை செய்து மின்மாற்றியை கழற்றி அதில் இருந்த சுமார் ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான காப்பர் பொருட்களை எடுத்துகொண்டு இரும்பு பொருட்களை விவசாய நிலத்தில் வீசி சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி முதல் அங்குள்ள வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இன்று காலை விவசாயிகள் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்று பார்த்த போது மின்மாற்றி பொருட்கள் விவசாய நிலத்தில் சிதறி கிடபப்து கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் சம்பவம் குறித்து மின்சாரதுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அம்பலூர் மின்வாரிய உதவி பொறியாளர் சத்திய மூர்த்தி திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் மின்சார துறை உதவி பொறியாளர் சத்திய மூர்த்தி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மர்ம நபர்கள் மின்சாரத்தை துண்டித்து  மின்மாற்றியில்  இருந்த ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான. ஆயிலை கீழே ஊற்றி  காப்பர் பொருட்களை  கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதனால் நேற்று இரவு 9 மணி முதல் தற்போது வரை விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் மற்றும் வீடுகளில் மின்சாரம் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்,

மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில்  கடந்த 6 மாதத்திற்கு முன்பு விவசாய நிலங்களில் இருந்த மின் மோட்டார்  ஸ்டாட்டர்கள் , கேபிள் ஒயர்கள் துண்டிக்கப்பட்டு கொள்ளையடித்து  சென்றதாகவும்,  இது குறித்து திம்மம்பேட்டை காவல்  நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்

மாருதி மனோ