தொடரும் ரேசன் அரிசி, மற்றும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுப்பது எப்படி? 

ரேசன் அரிசி கடத்தல்

தொடரும் ரேசன் அரிசி, மற்றும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுப்பது எப்படி? 

ரேசன் அரிசி, மற்றும் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுப்பது எப்படி? 

ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகள். !

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் அரிசி கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அறிந்த விசயமே

தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் ரேஷன் அரிசி மற்றும் மலிவு விலையில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் கடத்தப்பட்டு கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது வாடிக்கையே.

இதற்கு முக்கிய காரணங்கள் பல வகையுண்டு. ரேசன் கடைகளில் பணி புரியும் பணியாளர்கள் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை குற்றப் புலனாய்வு போலீசார், மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் என பல வகை காரணங்களை கூறலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அதிகாரிகளின் கன்ட்ரோலில் இயங்கும் புட் செல் போலீசார் சிலரின் துணையுடன் லைன் வாங்குகிறார்கள் கடத்தல்காரர்கள்.

அதாவது புட்செல் காவல் நிலைய அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து ஏரியாவை பிரித்துக் கொள்கின்றனர். 

அப்படி ஏரியாவை பிரித்து வாங்கிக் கொள்ளக் கூடிய ரிசீவர்கள் என்றழைக்கப்படும் முதன்மை கடத்தல் குற்றவாளிகள் , வெளிமாவட்டங்களில் சுற்றித் திரியும் ரௌடிகள், கஞ்சா குடிக்கிகள், கட்டப்பஞ்சாயத்து பார்ட்டிகளை அழைத்து வந்து அனைத்து சவுகரியங்களையும் செய்து கொடுத்து வியாபாரத்தை செய்கிறார்கள்.

இவர்கள் எடுத்த லைன் எந்த ஊரோ அந்த ஊரில் உள்ள சிலரை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் ஊரின் அனைத்துப் பகுதிகளில் இயங்கக் கூடிய ரேஷன் கடைகள், மற்றும் பொதுமக்கள் என இவர்களிடம் ரேஷன் அரிசிகளை வாங்கி சென்று மறைமுகமான இடத்தில் வைத்து விடுவார்கள். இவர்களுக்கு பெயர் "சி" பார்ட்டி அதாவது கேஷ் பார்ட்டி.

இப்படி சேர்த்து வைத்த பொருட்களை வாகனம் மூலம் வந்து சேகரித்து செல்வார்கள் இவர்களுக்கு பெயர் "B" பார்ட்டி. அதாவது இவர்களுக்கு கூலி அல்லது கமிஷன்

இப்படி கடத்திச் செல்லும் பொருட்களை ஏஜன்ட்டிடம் ஒப்படைப்பார்கள். அந்த ஏஜென்ட் தான் ரிசிவர் என்றழைக்கப்படும் கடத்தலின் உண்மை குற்றவாளி ஏஜென்ட்.

இவர்தான் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை தரம் பிரித்து குடோனில் சேகரித்து வைத்து அதை மில்களில் கொடுத்து குருணை ஆக்கி கோழிப் பண்ணைகளுக்கும் ,மாவாக அரைத்து மாவு வியாபாரிகள் மற்றும் முருக்கு, }மிக்சர் போன்ற பலகார கடைகளுக்கும் ஒட்டு மொத்தமாக அனுப்பி வைப்பார்கள்.

இவர்கள் வழக்கில் சிக்க மாட்டார்கள்.ஏனென்றால் இவர்கள் பணத்தை வீசியும், அதிகாரிகளின் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பது என பல காரணங்கள். அதுமட்டுமன்றி இவர்கள் புட்செல்லில் லைன்எடுக்கும் போது தனக்கு விசுவாசம் உள்ள அந்தந்த ஊர்களில் உள்ளவர்களின் பெயரிலே லைன் எடுப்பார்கள். 

ஆகவே இந்த ரிசீவர்ஸ் என்றழைக்கப்படும் முதன்மை கடத்தல்காரர்கள் சிக்க மாட்டார்கள். வழக்கில் சிக்குபவர்கள் எல்லாம் கமிசன் அடிப்படையிலும்,  கூலிக்கு பணி புரிபவர்களும் தான். 

சிக்கியவர்களை வெளியே எடுப்பதும், வழக்குகளை சிறிதாக்கி அந்தந்த மாவட்ட அலுவலகளில் பைன் கட்டி முடிப்பதும், வழக்கில்லாமல் செய்வதும் என அனைத்தையும் செய்பவர்கள் ரிசீவர்களே.

கேட்டில் பீட்ஸ்

கேட்டில் பீட்ஸ் எனும் நிறுவனங்களை நடத்தி வரும் சில நிறுவனங்கள் தீவணங்களை அரைக்கும் போது உடன் ரேஷன் அரிசியையும் கலந்து அரைத்து கால்நடை தீவனங்களை உருவாக்குகின்றனர்.

மேலும் ரேசன் அரிசியை நைஸ் செய்து பொன்னி அரிசியுடன் மிக்சிங் செய்வதாகவும் தகவல்கள் வருகின்றன.

இப்படி பல வகையில் ரேஷன் அரிசி பயன்படுத்தப்படுவதால் இதை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவர்களுக்கு இவ்வளவு தைரியம் எப்படி? 

ரேசன் கடத்தலில் முக்கிய குற்றவாளிகளான ரீசிவர்ஸ் என்று பெருமையுடன் அழைக்கப்படும் முதன்மை குற்றவாளிகளான ஏஜென்டுகள் சிக்காமல் இருப்பதற்கு காரணம் வழக்கை ஏற்றுக் கொள்ளும் கூலிப்படைகள் மற்றும் சில வழக்குகளில் ஆளைக் கொடுக்கும் கேஷ் பார்ட்டி எனும் " C 'யும், மாமூல் பெற்று உதவிகள் செய்யும் சில அதிகாரிகளின் துணையும் தான்.

ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகள். !

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் அரிசி கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அறிந்த விசயமே

இதற்கு முடிவு தான் என்ன என்பதை பார்ப்போம் .!

ரேஷன் அரிசி என்பது மிகவும் வறுமைக் கோட்டில் உள்ளவர்களும், கிராமம் மற்றும் நகர்ப்புற ஏழைகள் மட்டும் தான் உணவுக்காக பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் யாரும் ரேஷன் அரிசியை வாங்குவதில்லை. அதனால் தான் இவ்வளவு பெரிய நெட்வொர்க் நடைபெறுகிறது.

இப்படி ரேஷன் பொருட்கள் கடத்தல் மூலம் தமிழகத்தில் பல கோடிகள் புலங்கின்றன கள்ளச்சந்தையில்.

கடத்தலை தடுப்பது எப்படி? துறை சார் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசு கண்டு கொள்ள வேண்டிய விசயம்.!

தமிழ்நாடு அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். அதாவது வறுமைக் கோட்டில் உள்ளவர்களை கண்டறிந்தும்,ஏழை எளிய மக்களுக்கு மட்டும் இலவசமாக ரேஷன் அரிசியை வழங்க வேண்டும். ரேஷன் அரிசி வாங்கினால் தான் சலுகைகள் என்ற விதிவிலக்கை மாற்றி தேவையுள்ளவர்கள் மட்டும் வாங்கினால் போதும் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும்.

அதே போல் ரேஷன் கடைகளில் மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் மிச்சமாவதை கணக்கிட வேண்டும். மிச்சமாகக் கூடிய பொருட்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். அரிசி மற்றும் உணவுப் பொருட்களை சேமிப்பு செய்வதால் அரசுக்கு பல கோடிகள் மாதா மாதம் மிச்சம் ஆகும்.

இதற்கு ரேஷன் கடைகளில் GPS வசதியுடன் கூடிய கருவிழி ( கேமரா ) பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.

இப்படி எந்தந்த பகுதிகளில் அதிகமாக ஏழை, எளிய மக்கள் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு மட்டும் ரேஷன் அரிசியை வழங்கினால் மட்டுமே போதுமானது. இப்படிச் செய்தால் ரேஷன் அரிசி கடத்தல் முற்றிலுமாக தடுக்கப்பட முடியும்.

மேலும் ரேஷன் அரிசி வாங்காமலேயே கைரேகை பெற்று வாங்கியதாக கணக்கெழுதும் ரேஷன் கடை ஊழியர்கள், மற்றும் ரேஷன் அரிசியை வாங்கிக் கொண்டு அதை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யும் பொது மக்கள் என இவர்களுக்கு அரிசி தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை உருவாகும். அப்போது தாங்களாகவே ரேஷன் அரிசி கடத்தல் தொழிலை விட்டு விடுவார்கள் என்பதே செய்தியின் நோக்கம்.