ஊட்டியில் இரண்டு பெண்களை காதலித்து கர்பமாக்கிய இளைஞர் ! அதில் ஒரு பெண் 15 வயது ??போக்சோ வழக்கில் இளைஞர் கைது .!

நீலகிரி

ஊட்டியில் இரண்டு பெண்களை காதலித்து கர்பமாக்கிய இளைஞர் ! அதில் ஒரு பெண் 15 வயது ??போக்சோ வழக்கில் இளைஞர் கைது .!

ஊட்டி: இன்றைக்கு 2 கே கிட்ஸ் இளைஞர்கள், இளம் பெண்கள், காதல் குறித்தும், போக்சோ வழக்குகள் குறித்தும் போதிய புரிதல்கள் இல்லாமல் இருக்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 22 வயதாகும் பிரவீன் டிப்ளமோ முடித்துள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவருக்கும், ஊட்டியில் தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார்கள். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இடையே செல்ல சண்டைகள் ஏற்பட்டுள்ளது. அப்போது 2 பேரும் தற்காலிகமாக பிரிந்துள்ளனர்.

இந்த சமயத்தில் பிரவீனுக்கு, ஊட்டியில் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறதாம். அவரையும் காதலிப்பதாக கூறி சுற்றி வந்துள்ளார். இதற்கிடையே பள்ளி மாணவியுடன் சமாதானமாகி, அவருடன் மீண்டும் பிரவீன் பழகி வந்தார். அப்போது பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி எல்லை மீறியதாக கூறப்படுகிறது. பின்னர் அவருடன் தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டார்.

மறுபுறம் மீண்டும் கல்லூரி மாணவியுடன் பிரவீன் நெருங்கி பழகி வந்தார். இதில் அவர் கர்ப்பம் அடைந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கல்லூரி மாணவி கர்ப்பமானது தெரியவந்ததால், அவரது வீட்டிற்கு தெரியாமல் பிரவீன் மாணவியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். மேலும் கல்லூரி மாணவி 18 வயது நிறைவடைந்தவராக இருந்ததால் பிரச்சினை ஏற்படவில்லை. மேலும் அவருக்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

இந்தநிலையில் பள்ளி மாணவிக்கு கடந்த 3-ந் தேதி திடீரென வயிறு வலி ஏற்பட்டிக்கிறது. அவரை தாய் ஊட்டி அரசு மருத்துவனைக்கு அழைத்து சென்றார். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இதனால் மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் அதிலிருந்து மீள்வதற்குள், சிறிது நேரத்தில் பள்ளி மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கும், ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பிரவீன் 15 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கியது தெரியவந்தது. இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, பிரவீனை போலீசார் கைது செய்தனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் கை குழந்தைகளுடன் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வருகின்றனர். காதல் என்ற பெயரில் சுற்றும் மாணவ மாணவிகளுக்கு இந்த சம்பவம் பெரிய பாடமாக இருக்கிறது. தயவு செய்து காதல் என்ற பெயரில் எல்லை மீறக்கூடாது. 18 வயது நிறைவு பெறாமல் காதலிப்பதும் சிக்கலில் போய் முடியும் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.