பராசக்தி படத்திற்கு கிடைத்த சென்சார்.. சிவகார்த்திகேயன் குஷி.. ரிலீஸ் உறுதியாகிறது.. நடந்தது என்ன?

பராசக்தி

பராசக்தி படத்திற்கு கிடைத்த சென்சார்.. சிவகார்த்திகேயன் குஷி.. ரிலீஸ் உறுதியாகிறது.. நடந்தது என்ன?

சென்னை: பராசக்தி படத்திற்கு ஒருவழியாக மத்திய தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. U / A சான்றிதழ் வழங்கியது மத்திய தணிக்கை வாரியம்.

சான்றிதழ் வழங்கப்பட்டதால் படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடக்கூடிய படத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 16+ வயது கொண்டவர்கள் படம் பார்க்கும் வகையில் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிய 'பராசக்தி' திரைப்படம், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) பரிந்துரைத்த வெட்டுக்களை ஏற்க மறுத்ததையடுத்து, மும்பையில் உள்ள திருத்தக் குழுவை நாடியது. ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததால், பொங்கல் வெளியீட்டில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து ரிவைசிங் கமிட்டியிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது.

படத்தின் கதைக்களம்

1960களில் மெட்ராஸில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தின் கதை மற்றும் வரலாற்று ஒருமைப்பாட்டை, தணிக்கைக் குழு கோரியுள்ள வெட்டுக்கள் பாதிக்கும் என சுதா கொங்கரா வாதிடுகிறார். படத்தின் அடிப்படைக் கருவையே இவை சிதைத்துவிடும் என்பது அவரது நிலைப்பாடு.

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) மொத்தம் 15 கூடுதல் வெட்டுக்களைக் கோரியது. இந்த மாற்றங்களை இயக்குநர் மறுத்ததால், 'பராசக்தி' வெளியீடு இரண்டு முதல் மூன்று வாரங்கள் தாமதமாகலாம் என்று கூறப்பட்டது.

முன்னதாக தணிக்கைச் சான்றிதழ் குறித்த நிச்சயமற்ற நிலை நிலவினாலும், படக்குழுவினர் விளம்பரப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்டோர் புதன்கிழமை கேரளாவில் ஒரு கல்லூரி நிகழ்வில் பங்கேற்று படத்தைப் பிரபலப்படுத்தினர்.

1960களில் தமிழ்நாட்டின் அரசியல் களத்தை வடிவமைத்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களே 'பராசக்தி' படத்தின் கதைக்களத்தின் ஆணிவேராகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) அடிப்படைக் கொள்கையுடன் தொடர்புடைய இந்த உள்ளடக்கம், வெளியீட்டுச் சூழலுக்கு அரசியல் முக்கியத்துவம் சேர்க்கிறது.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட 'பராசக்தி', 1960களின் மெட்ராஸ் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பலியான உயிர்களைச் சித்தரிக்கிறது. இயக்குநர் சுதா கொங்கரா பிரசாத் இயக்கிய இந்தப் படம், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் 100வது படைப்பாகும்.

படம் ரிலீஸ் ஆகிறது

பராசக்தி படத்திற்கு ஒருவழியாக மத்திய தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. U / A சான்றிதழ் வழங்கியது மத்திய தணிக்கை வாரியம்.

இதேபோன்ற சிக்கலை சமீபத்தில் தளபதி விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படமும் மத உணர்வுகள் தொடர்பான காட்சிகளுக்காக CBFC-யில் சந்தித்தது. அத்திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. ஜனநாயகன் படம் தணிக்கைக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து CBFC மேல்முறையீடு செய்துள்ளது. இந்த அளவிற்கு CBFC இந்த படத்தை வேகமாக எதிர்க்க என்ன காரணம்.. இதற்கு பின் என்னதான் பிரச்சனை இருக்கிறது என்று பார்க்கலாம்.

ஜனநாயகன் படம் தணிக்கைக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தலைமை நீதிபதி அமர்வில் தணிக்கை வாரியம் முறையீடுசெய்துள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உறுதி அளித்துள்ளார். திங்கள் கிழமை மேல்முறையீடு மனுவை விசாரிக்க தணிக்கை வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.