தென்காசியில் ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாடு .!
தென்காசி
தென்காசியில் ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
தென்காசி டிச 27
தமிழ்நாடு முதலமைச்சர் 2021 தேர்தல் வாக்குறுதியில் லட்சக்கணக்கான அரசு ஊழியர் ஆசிரியர் அரசு பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டம், ஆசிரியர் தகுதி தேர்வு, உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி தென்காசி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து ஜாக்டோ ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாடு இன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிர மணியன், ஆரோக்கிய ராசு, பிச்சைக்கனி! சண்முகசுந்தரம்! முருகேஷ், ராஜேந்திரன் ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மாரிமுத்து வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் துரைசிங் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
எழுத்தாளர் பென்ஸ் கஜேந்திர பாபு ஜனவரி 6 ல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தின் அவசியம் குறித்து போராட்ட ஆயத்த மாநாட்டை துவக்கி வைத்து துவக்க உரையாற்றினார்.
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் காந்தி ராஜ் நிறைவு உறை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் முருகையா, மாவட்ட செயலாளர் சங்கர நாராயணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சதீஷ் குமார், துணைத் தலைவர் அன்பரசு மற்றும் ரமேஷ் ஐயப்பன், ராஜ், கருப்பசாமி, சேகர், மூக்கையா, முத்து, மாரியப்பன், சுப்பிரமணியன், வேல்ராஜன், ஆறுமுகசாமி, பிரகாஷ், திருமலை கொழுந்து, மோகன்ராஜ் மாடசாமி, பிச்சுமணி, இசக்கிதுரை, புதியவன், காளிராஜ், செந்தில், கணேஷ், மாரீஸ்வரி, செல்வி, கலைச்செல்வி உள்ளிட்ட பலர் வேலை நிறுத்த போராட்டம் வெற்றி பெற வாழ்த்தி பேசினர்.
இந்த மாநாட்டில் பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்
