படுகொலை செய்யப்படும் நிக்கோலஸ் மதுரோ? டிரம்பின் மெகா பிளான்! பற்றி எரியப்போகும் லத்தீன் அமெரிக்கா.!

அமெரிக்கா Vs வெணிசுலா

படுகொலை செய்யப்படும் நிக்கோலஸ் மதுரோ? டிரம்பின் மெகா பிளான்! பற்றி எரியப்போகும் லத்தீன் அமெரிக்கா.!

கராகஸ்: நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் விரைவில் கொலை செய்யப்படலாம் என்று வெனிசுலாவின் துணை அதிபர் சந்தேகம் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலைமையை சமாளிக்க தற்போது வெனிசுலாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்று அதிகாலை 2-3 மணியளவில் வெனிசுலாவின் தலைநகர் மீது, ஹெலிகாப்டர் மூலம் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. மிகவும் தாழ்வாகப் பறந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பரவப்பட்டு வருகின்றன.

இந்த தாக்குதலில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். இந்த தகவலை வெனிசுலா அரசாங்கமும் உறுதி செய்து இருக்கிறது.

மட்டுமல்லாது, வெனிசுலாவின் பாதுகாப்புத்துறை அமைச்சரின் வீட்டின் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்திருப்பதாகவும், சிரியாவை போல உள்ளே இருந்தே ஆட்கள் காட்டி கொடுத்ததால், இந்த தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வெனிசுலா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சீனா, ரஷ்யா, ஈரான், மெக்சிகோ, கொலம்பியா, வியட்நாம், கியூபா, பொலிவியா, நிகரகுவா, ஏமன், பாலஸ்தீன் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. அமெரிக்காவின் தாக்குதல் தொடர்பான அச்சுறுத்தலுக்கு பயப்பட வேண்டாம் என்றும், அனைத்து படைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் வெனிசுலா பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில்தான், மதுரோவை அமெரிக்கா படுகொலை செய்யப் போவதாக சந்தேகம் எழுந்திருப்பதாக, வெனிசுலா நாட்டின் துணை அதிபர் அச்சம் தெரிவித்திருக்கிறார்.

நிலைமை மோசமாக இருப்பதால், பொதுமக்கள் அனைவரும் ஆயுதங்களுடன் வீதிக்கு வாருங்கள் என்று வெனிசுலா துணை அதிபர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

அதிபர் மதுரோ நமக்கு சொல்லிக் கொடுத்த வேலை‌ திட்டத்தை, உடனடியாக செயல்படுத்துங்கள் என்றும், பாதுகாப்புத் துறை அமைச்சர் வழிகாட்டுதலை பின்பற்றுங்கள் எனவும்,

நம் நாட்டின் சொத்துக்களாக உள்ள தங்கத்தையும், பெட்ரோலியத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த தாக்குதல் விவகாரம் குறித்து சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், வெனிசுலா நாட்டின் எண்ணெய் வளங்களை கைப்பற்றுவது என்பதுதான் அமெரிக்காவின் முக்கிய நோக்கம்.

வெனிசுலாவை கைப்பற்றி விட்டால், லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள எண்ணெய் வளத்தை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் வரும் வருவாயை வைத்து, ஈரான் மீது தாக்குதலில் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு இருக்கிறது. இந்த தாக்குதல் ஈரானுடன் நிற்காது என்றும் அவர்கள் எச்சரித்திருக்கின்றனர்.