மேட்டுப்பாளையம் 6 வது வார்டு பகுதிகளில் பொங்கல் தொகுப்பு மற்றும் பரிசு தொகை.!

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் 6 வது வார்டு பகுதிகளில் பொங்கல் தொகுப்பு மற்றும் பரிசு தொகை.!

பொங்கல் பரிசுத்தொகை, பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 3,000 பரிசுத்தொகையுடன் பொங்கல் தொகுப்பு ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கி துவக்கி வைத்தார் .

அதை தொடர்ந்து , மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 6 வது வார்டில் அமைந்துள்ள இரண்டு நியாய விலை கடைகளில் நகரமன்ற உறுப்பினர் அ.ஸமீனாபேகம் அப்துல் ஹக்கீம்.M.C. பொங்கல் பரிசு தொகையுடன் கூடிய தொகுப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் திமுக வடக்கு நகர செயலாளர் அ. அஷ்ரப்அலி , மமக மாவட்ட தலைவர் மு‌. அப்துல் ஹக்கீம், திமுக மாவட்ட பிரதிநிதி பால்ராஜ்,6 வார்டு திமுக செயலாளர் விடியல் விமல், சிறுபான்மைபிரிவு அமைப்பாளர் அய்யூப், திமுக மாற்று திறனாளிகள் அணி நகர மன்ற உறுப்பினர் ஷேக்பரீத் ,
தமுமுக மாவட்ட துணை செயலாளர் முஹம்மது சேட், MVS மாவட்ட பொருளாளர் ஜுபைர், மாவட்ட இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஷேக், மமக நகர செயலாளர் யாசர் அராபத், நகர பொருளாளர் பாசில் மற்றும் பொதுமக்கள் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )