அமெரிக்காவில் தரையிறங்கிய அடுத்த நொடி.. வெனிசுலா நிக்கோலஸ் மதுரோ சொன்ன.. அந்த வார்த்தை.!
வெனிசுலா Vs அமெரிக்கா
நியூயார்க்: வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் அமெரிக்கப் படைகளால் காரகாஸில் நடந்த இரவு நேரத் தாக்குதலில் கைது செய்யப்பட்டு, நியூயார்க் நகரத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.
இது உலக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
மன்ஹாட்டனில் உள்ள அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு நிர்வாக (டி.இ.ஏ) தலைமையகத்தில் அதிகாரிகளை "குட் நைட், ஹேப்பி நியூ இயர்" என மதுரோ சிரித்த முகத்துடன் வாழ்த்தினார். தான் அமெரிக்க சிறையில் இருக்க போகிறோம் என்று அஞ்சாமல் அவர் துணிச்சலாக சொன்ன இந்த விஷயம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
மதுரோவை கைது செய்ய, அமெரிக்கப் படைகள் ஞாயிற்றுக்கிழமை அவரது காரகாஸ் ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தின. வெனிசுலா தலைவர் விலங்கிடப்பட்ட நிலையில், மன்ஹாட்டனில் உள்ள டி.இ.ஏ தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, தன்னுடன் வந்த அதிகாரிகளுக்கு அவர் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மதுரோவை இரு டி.இ.ஏ அதிகாரிகள் உள்ளே அழைத்துச் செல்லும் காணொளியில் அவர் புன்னகையுடன் வாழ்த்தியுள்ளார்.
வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ
நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஸ்டீவார்ட் ஏர் நேஷனல் கார்டு தளத்தில் மதுரோவும் அவரது மனைவியும் தரையிறங்கினர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மன்ஹாட்டன் டி.இ.ஏ அலுவலகத்திற்கும், பின்னர் புரூக்ளினில் உள்ள மெட்ரோபொலிட்டன் தடுப்பு மையத்திற்கும் மாற்றப்பட்டனர். நியூயார்க் வந்தடைந்தவுடன், மன்ஹாட்டனில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்திற்கு அவர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி, மதுரோ மீது போதைப்பொருள் பயங்கரவாதம், கோகேயின் கடத்தல் மற்றும் ஆயுதக் குற்றங்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். "கார்டெல் ஆஃப் தி சன்ஸ்" எனப்படும் போதை கடத்தல் கும்பலின் தலைமையுடன் அவர் தொடர்புடையவர் என்றும் புகார்கள் வைக்கப்படுகின்றன. இதற்கு முன்பு, அவரது கைது உதவும் வகையில் தகவல் அளிப்பவர்களுக்கு அமெரிக்க நீதித்துறை 15 மில்லியன் டாலர் வெகுமதியை அறிவித்திருந்தது.
சரமாரி அட்டாக்
சனி அதிகாலையில் துரிதமாக நடந்த தாக்குதலில் மதுரோவும் மனைவி சிலியா ஃப்ளோரஸும் அமெரிக்கப் படைகளால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களின் பெட்ரூமில் ராணுவம் புகுந்து கைது செய்தது. காரகாஸ்வாசிகள், இந்த தாக்குதலின்போது வெடிச்சத்தங்களைக் கேட்டனர்; குறைந்தது ஏழு குண்டுகள் வெடித்து, ராணுவ இலக்குகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மதுரோ இல்லாத நிலையில் தற்காலிக ஜனாதிபதியான டெல்சி ரோட்ரிக்ஸ் அங்கே ஆட்சி நடத்தி வருகிறார். செய்தியாளர் சந்திப்பில் அவர், அமெரிக்க தாக்குதலால் பொதுமக்கள் மற்றும் ஆயுதப்படை உறுப்பினர்கள் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டாலும், எண்ணிக்கையைத் தெரிவிக்கவில்லை.
மதுரோவிற்கு என்ன ஆனது?
அதே சமயம் இடைக்கால அளவில் வெனிசுலாவை நிர்வகிக்கும் பொறுப்பை அமெரிக்கா ஏற்கும் என்று முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். இந்த மாற்றம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
வெனிசுலா நாட்டை நாங்களே ஆளப்போகிறோம்.. இனி அங்கே உள்ள எண்ணெயை வர்த்தகம் செய்யும் வரை, அதை பயன்படுத்தும் வரை சில முதல் பல காலங்களுக்கு நாங்கள் வெனிசுலா நாட்டை ஆளப்போகிறோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுராவை கைது செய்த நிலையில் டிரம்ப் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சாம்ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்கா தன்வசம் கொண்டு வந்துள்ளது.
