தித்வா புயல் காரணமாக திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு மலையேற தடை. ! பாறைகள் உருண்டு விழும் என்பதால் முன்னெச்சரிக்கை. !

திருவண்ணாமலை

தித்வா புயல் காரணமாக திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு மலையேற தடை. ! பாறைகள் உருண்டு விழும் என்பதால் முன்னெச்சரிக்கை. !

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் புகழ்பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

இங்கு நடக்கும் மிக முக்கிய உற்சவங்களில் ஒன்றான கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 24 அன்று கொடியேற்றுத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும் இந்த மகா உற்சவத்தில் பத்தாவது நாளில் மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். 2668 அடி உயர அண்ணாமலை மலையில், உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த ஆண்டு பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கூறுகையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 3-ந்தேதி (புதன்கிழமை) ஏற்றப்படுகிறது. அன்று அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.

தற்போது 'தித்வா' புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழை பொழிவதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே புயல் எச்சரிக்கை மற்றும் வல்லுனர் குழு அறிக்கை அடிப்படையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இந்த ஆண்டு பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.