விஜய் கூட்டம் முடிந்து கோவையை நோக்கிச் செல்லும் வழியில் பின்தொடர்ந்து சென்ற த வெ க வினர் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதலில் பலர் காயம். !
த வெ க
விஜய் இன்று ஈரோடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
விஜய் கார் 140 கிமீ வேகம் வரை சென்ற போதிலும், அவரை ரசிகர்கள் பின் தொடர்ந்தனர். 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் விஜய் காரை பாலோ செய்தபடியே சென்றனர்.
அப்போது விஜய் காரை தவெக தொண்டர்கள் பலரும் டூவீலரில் பின் தொடர்ந்தனர். அப்போது திருப்பூர் பல்லகவுண்டம்பாளையம் அருகே மேம்பாலத்தில் விஜய் கார் சென்ற போது டூவிலர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
முதலில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்று மோதி கீழே விழுந்த நிலையில் பின்னால் வந்து கொண்டிருந்த மற்ற இருசக்கர வாகனங்களும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.
சுமார் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளதாகவும் சிலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
