அருள்மிகு ஶ்ரீ கிரிஜாம்பாள் உடனுறை ஸ்ரீ கவீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி பௌர்ணமியை முன்னிட்டு ஆருத்திரா தரிசன நாட்டியாஞ்சலி.!

கிருஷ்ணகிரி

அருள்மிகு ஶ்ரீ கிரிஜாம்பாள் உடனுறை ஸ்ரீ கவீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி பௌர்ணமியை முன்னிட்டு ஆருத்திரா தரிசன நாட்டியாஞ்சலி.!

கிருஷ்ணகிரி கிருஷ்ணதேவராயர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுமார் ஆயிரம் ஆண்டு பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ கிரிஜாம்பாள் உடனுறை ஸ்ரீ கவீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி பௌர்ணமியை முன்னிட்டு ஆருத்திரா தரிசன நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு நலசங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

மார்கழி மாத பௌவுர்ணமியை யொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் திருக்கோவில்களில் பௌவுர்ணமி பூஜை மற்றும் ஆருத்திரா தரிசனம் பூஜை நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி நகரம், பழையப்பேட்டை கிருஷ்ண தேவராயர் மலை அடிவாரத்தில் அமைத்துள்ள சுமார் ஆயிரம் ஆண்டு பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ கிரிஜாம்பாள் உடனுறை ஸ்ரீ கவீஸ்வரர் திருக்கோவில் மார்கழி மாத பெளர்ணமியை யொட்டி ஆருத்திரா தரிசனப் பூஜை நடைபெற்றது.

இதில் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானவர்கள் கலந்துகொண்டு அருள்மிகு ஶ்ரீ கிரிஜாம்பாள் உடனுறை ஸ்ரீ கவீஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஆருத்திரா நாட்டிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு நலசங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான நாட்டியாஞ்சலி மாணவ, மாணவிகள் ஆருத்திரா நடன நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

பின்னர் சிறப்பாக ஆருத்திரா நடனம் ஆடிய மாணவிகளை பாராட்டி திருக்கோவில் தலைவர் துக்காராம் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.

இந்த ஆருத்திரா நடன நிகழ்ச்சியினை ஏராளமானவர்கள் கண்டு களித்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ