கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்  ( தலையாரி ) பணிக்கு நேர்முகத் தேர்வு.!

ராமநாதபுரம்

கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்  ( தலையாரி ) பணிக்கு நேர்முகத் தேர்வு.!

அரசு பணி.....

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்  ( தலையாரி ) பணிக்கு நேர்முகத் தேர்வு இன்று ( 05.12.2025 ) நடைபெறுகிறது. ( 2 நபர்கள் மட்டும் )

கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட எக்ககுடி, பனைக்குளம் கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளராக பணிபுரிய 120 நபர்கள் மனு அளித்து அதில் 59 நபர்கள் தாலுகா பகுதியில் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து 40 நபர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர்.
   

இராமநாதபுரம் மாவட்ட கோட்டாட்சியர் ஹபீப் ரஹ்மான் கீழக்கரை தாலூகா வட்டாட்சியர் செல்லப்பா, கீழக்கரை சமூக பொருப்பு வட்டாட்சியர் ஜலால் முகம்மது, துணை வட்டாட்சியர் ராமர், மற்றும் அலுவலக அதிகாரிகள் சரவணன், ஜெயக்குமார், கண்ணன் ஆகியோர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த நபர்களை பரிசீலனை செய்தனர்.

இறுதி முடிவு அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிடுவார்.

செய்தியாளர்

அப்துல் காதர்