இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை - ஏர்வாடி E.C.R ரோடு அருகே கார் விபத்து. ! 5 பேர் பலி. !
கீழக்கரை
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை - ஏர்வாடி E.C.R ரோடு ( கும்பிடு மதுரை விலக்கு ) பகுதியில் இன்று அதிகாலை 02.00 மணி அளவில் கார் விபத்து. இதில் 5 நபர்கள் உயிர்பலி.
ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் (கருப்பு நிற கார்) தங்களது வாகனத்தை தூங்குவதற்கென ஓரமாக நிறுத்திவிட்டு ஓய்வெடுத்தனர். கீழக்கரையை சேர்ந்த வெள்ளைநிற கார் ஒன்று வேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்து நின்றிருந்த காரின் மேல் பயங்கரமாக மோதியுள்ளது.

விபத்தில் சாலையோரம் இருந்த மின்கம்பம் ஒன்றும் சாய்ந்தது.
வெள்ளை நிற காரின் ஓட்டுனர் கீழக்கரையை சேர்ந்த முஸ்தாக் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதே போல் நின்றிருந்த கருப்பு நிற காரில் இருந்த 4 நபர்கள் உயிர் இழந்தனர்.இரு கார்களிலும் இருந்த மற்ற நபர்கள் படுகாயம் அடைந்ததால் இராமநாதபுரம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
படுகாயம் அடைந்தவர்களில் இருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வருகிறது.
ஓய்வெடுக்க காரை நிறுத்திய இடம் வலைவான பகுதியாகவும், அதன் அருகே ரோட்டோரத்தில் நெடுஞ்சாலை துறையின் அறிவிப்பு பலகையாக இது விபத்து பகுதி ( Accident Jone ) போர்டும் இருப்பது குறிப்பிடத்தக்கது..
செய்தியாளர்
அப்துல் காதர்
