நாரலம்பள்ளி ஊராட்சியின் மூலமாக செயப்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகள் மற்றும் செலவினங்கள் குறித்து சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கேட்டறிந்தார். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள நாரலம்பள்ளி ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வரவு செலவு உள்ளிட்ட கோப்புகளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி ஒன்றியம் நாரலம்பள்ளி ஊராட்சியின் மூலமாக செயப்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகள் மற்றும் செலவினங்கள் குறித்து சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தகவல் கேட்டறிந்தார்.

இதனை அடுத்து பொது தகவல் அலுவலரும், கிருஷ்ணகிரி துணை வட்டார வளர்ச்சி சண்முகம் உத்தரவின்படி
நாரலம்பள்ளி ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் கோப்புகளை சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் பார்வையிடலாம் என்று தெரிவித்து இருந்தார்.
இதன்படி டாக்டர் சந்திர மோகன் ஊராட்சி செயலாளர் பரமேஸ்வரி முன்னிலையில் நாரலம்பள்ளி ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள், தெரு விளக்கு அமைத்தல், கிராம சாலை அமைத்தல், குடிநீர் இணைப்பு ஊராட்சி செயலாளரின் மாத ஊதியம், கல்வி தகுதி, கலைஞர் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறுகோப்புகளை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சந்திரமோகன் ......
நாரலம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் மற்றும் வரவு செலவுகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் கேட்கப்பட்டது. இதனை அடுத்து பொது தகவல் அலுவலரும்,
துணை வட்டார வளர்ச்சி சண்முகம் உத்தரவின்படி கோப்புகளை பார்வையிட்டேன்.
அப்போது நான் கேட்டு இருந்த தகவல் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட்டு வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதில் ஒரு சில கோப்புகளைக் முறையாக பராமாரிக்கப்படாதது தெரியவந்தது. இந்தக் கோப்புகளை விரைவாக பராமரித்து கோப்புகளை தனக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது சமுக நுகர்வோர் அமைப்பினை சேர்ந்த ஜெய்சன், சக்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
