ஒரப்பம் முழு நேர நியாயவிலைக் கடையில் மாவட்டம் முழுவதும் உள்ள  5,77,217 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.179.60 கோடி மதிப்பில் பொங்கல் தொகுப்பு. !

கிருஷ்ணகிரி

ஒரப்பம் முழு நேர நியாயவிலைக் கடையில் மாவட்டம் முழுவதும் உள்ள  5,77,217 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.179.60 கோடி மதிப்பில் பொங்கல் தொகுப்பு. !

கிருஷ்ணகிரி  மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், எஸ் 5920 மருதேப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும், ஒரப்பம் முழு நேர நியாயவிலைக் கடையில் மாவட்டம் முழுவதும் உள்ள  5,77,217 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.179.60 கோடி மதிப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.3,000/-அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகள் மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர்  துவக்கி வைத்தனர்.

உடன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி கீதாராணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல பொது மேலாளர் தணிகாசலம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ