பொங்கல் பரிசான ரூ.3000 ஆயிரத்தை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்வதாக சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் புகழாரம்..!

கிருஷ்ணகிரி

பொங்கல் பரிசான ரூ.3000 ஆயிரத்தை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்வதாக சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் புகழாரம்..!

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ரேசன் கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசான ரூ.3000 ஆயிரத்தை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்வதாக சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் புகழாரம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் 1058 நியாய விலை கடைகள் மற்றும் நுகர் பொருள் வாணிபக் கழகம் நடத்தும் 36 நியாய விலைக் கடைகள் என மொத்தம் 1094 நியாய விலை கடைகளில் உள்ள 5 லட்சத்து 77 ஆயிரத்து 217 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு மற்றும் ரொக்கம் ரூபாய் 3,000 அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் பொதுமக்களுக்கு ஏற்கனவே துவக்கி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆலப்பட்டி, காமராஜர் நகர், மாதேப்பட்டி, இட்டிக்கல் அகரம்,புதிய வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ரேசன் கடைகளில் இரண்டாவது நாளாக பொங்கல் தொகுப்பு பரிசுகள் வழங்கப்பட்டது,

இந்த பொங்கல் பரிசு தொகுப்புகளை அந்த அந்த ரேசன் கடை விற்பனையாளர்களான வெங்கடசாமி, திருமதி சந்தனகுமாரி, தமிழ்செல்வி ஆகியோர் ரூ.3000 ஆயிரத்துடன், முழு பொங்கல் கரும்பு, ஒரு கிலோ பச்சை அரிசி ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றினை வழங்கினர்.

மேலும் இந்த பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சமுக நுகர்வோர் பாது காப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசாக தமிழக அரசு ரூ. 3000, கரும்பு, வேஸ்டி, சேலை, சர்க்கரை, அரிசி ஆகியவற்றினை வழங்கி வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு தமிழக அரசு கொடுக்கும் பொங்கல் பரிசுகளை மகிழ்சியுடன் வாங்கி செல்வதாக தெரிவித்தார்.

அப்போது நுகர்வோர் அமைப்பை சேர்ந்த ஜெய்சன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ