விசிக வருவது இருக்கட்டும் அவுங்க தொண்டர்கள் ஏற்கனவே த வெ க விற்கு வந்துட்டாங்க - செங்கோட்டையன் பேச்சு. !
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் தவெக-வின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பங்கேற்று அலுவலகத்தைத் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குறித்து மிகக் காரசாரமான கருத்துகளை முன்வைத்தார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த செங்கோட்டையன் கூறியதாவது:
"திமுக கூட்டணிக் கட்சிகளுக்குள்ளேயே இப்போது பலத்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 2026 தேர்தலை முன்னிட்டு அங்குள்ள கட்சிகள் அதிருப்தியில் உள்ளன.
விசிக கட்சி தவெக கூட்டணிக்கு வருமா என்று கேட்கிறீர்கள்.. அந்தக் கட்சி வருகிறதோ இல்லையோ, விசிக தொண்டர்கள் இப்போது தவெக-விற்கு வந்து கொண்டுள்ளனர்," என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
திமுக நடத்தும் கூட்டங்களுக்குக் காசு கொடுத்து ஆட்களைக் கூட்டுகிறார்கள்; ஆனால் தவெக நடத்தும் கூட்டங்களுக்குத் தளபதி விஜய்க்காக மக்கள் தானாகவே கூடுகிறார்கள்," என்று அவர் விமர்சித்தார்.
புத்தாண்டு தினத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் இந்தத் தீவிரமான அரசியல் நகர்வு மற்றும் செங்கோட்டையனின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
