நேற்று வந்தவங்களுக்கு பதவி உழைத்த எங்களுக்கு? த வெ க கூட்டத்தில் செங்கோட்டையனை முற்றுகையிட்ட தொண்டர்கள். !
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் த.வெ.க. கிளை அலுவலகம் திறந்து வைக்க அக்கட்சியின் மாநில நிர்வாகக்குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சென்றபோது, அங்கு அவரை அக்கட்சியினர் முற்றுகையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த சிவன்மலையில் த.வெ.க. கிளை அலுவலகத்தை செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், த.வெ.க.வில் டி.டி.வி., ஓ.பி.எஸ். இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்தார். தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டு வருவதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தூய்மையான ஆட்சி அமையும் என்று த.வெ.க. மாநில நிர்வாகக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வெள்ளக்கோவிலில் கிளை அலுவலகம் திறந்து வைக்க வந்த செங்கோட்டையனை, த.வெ.க.வினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
10 ஆண்டுகளுக்கு மேலாக விஜய்க்காக பணியாற்றிய தங்களுக்கு பொறுப்புகள் வழங்கவில்லை என்று முறையிட்டனர். இந்த விவகாரம் குறித்து பேசி தீர்வு எட்டப்படும் எனக் கூறி செங்கோட்டையன் சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.
