ஓரணியில் தமிழ்நாடு எனும் முழக்கத்தோடு நிகழ்ச்சி. !

செங்கல்பட்டு

ஓரணியில் தமிழ்நாடு எனும் முழக்கத்தோடு நிகழ்ச்சி. !

திருப்போரூரில் "ஓரணியில் தமிழ்நாடு உரிமைகளை மீட்கும் தி.மு.க உற்சாகத்தில் உடன்பிறப்புகள்.!

தி.மு.க.வில் உறுப்பினா்களைச் சோ்ப்பதற்கான 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தை,அக்கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் வியாழன் அன்று தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு தேர்தல் களத்தில் வித்தியாசமான பிரசாரங்களை எப்பொழுதும் தி.மு.க. முன்னெடுக்கும் நிலையில், அதன் ஒரு பகுதியாக 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க, மொழி, இனம் காக்க "ஓரணியில் தமிழ்நாடு' திரள வேண்டும் என்னும் நோக்கத்துடன், தி.மு.க.வின் இந்த பிரச்சாரம் நேற்று ஆரம்பமானது.

அதன் தொடர்ச்சியாக 'காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் வடக்கு தெற்கு மற்றும் பேரூர் கழகம் சார்பில் பூத் நிலை முகவர்கள் (பி.எல்.ஏ-2) , பூத் தகவல் தொழில்நுட்ப (பி.டி.ஏ) நிர்வாகிகளுடன் 2026 சட்டமன்ற தேர்தலை  எதிர்கொள்ளுதல் மற்றும் "ஓரணியில் தமிழ்நாடு" தி.மு.க.வில் உறுப்பினர்கள் சேர்த்தல் போன்றவற்றின் பயிற்சி பாசறை கூட்டம் மாவட்ட செயலாளரும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ. அன்பரசன் ஆணைக்கிணங்க திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவரும்,  வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான எல்.இதயவர்மன் தலைமையில் தொகுதி பார்வையாளர் அண்ணாதுரை பங்கேற்பில் திருப்போரூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர். பையனூர் எம்.சேகர் முன்னிலையில் , திருப்போரூர் பேரூராட்சி மன்றத் தலைவரும் பேரூர் கழக செயலாளருமான எம்.தேவராஜ் வரவேற்புரையுடன் காலவாக்கம் கணேஷ் மஹாலில் நடைபெற்றது .

இக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள், மொழி, இன பாதுகாப்பு, உரிமை கோரல் மற்றும் பா.ஜ தலைமையிலான ஒன்றிய அரசின் அவலம் உள்ளிட்டவற்றை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் செயல்பட்டு., தமிழ்நாட்டின் சுயாட்சி, மொழி, இன உணர்வு உள்ளிட்டவற்றை காப்பதற்கு, ஓரணியில் தமிழ்நாடு திரள வேண்டும் என்பதை குறித்து உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில்,திருப்போரூர் தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன்,ஒன்றிய துணை செயலாளர்.எல். ஜெயபால்,மாவட்ட பிரதிநிதிகள் தாழம்பூர் ஏ.கருணாகரன்,மு.மயில்வாகனன்,நாவலூர் ஊராட்சி தி.மு.க. செயலாளர் நாவலூர்.மு. ராஜாராம் மாவட்ட ஒன்றிய , கிளைக் கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள்,  உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பூத் நிலை முகவர்கள், பூத் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள் நிர்வாகிகள் உற்சாகத்தோடு  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்

  சுகுமாரன்