திருப்பூர் எஸ் எஸ் ஐ சண்முகவேல் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மணிகண்டன் போலீசாரால் சுட்டுக் கொலை. !

திருப்பூர்

திருப்பூர் எஸ் எஸ் ஐ சண்முகவேல் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மணிகண்டன் போலீசாரால் சுட்டுக் கொலை. !

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பணியாற்றிய எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட மணிகண்டன் இன்று அதிகாலை என்கவுன்டரில் உயிரிழந்தார்.

கடந்த சில நாள்களுக்கு முன் அவரது தந்தை மற்றும் மகன் போலீசில் சரணடைந்த நிலையில், தலைமறைவாக இருந்த மணிகண்டனை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த சூழலில் அதிகாலை மணிகண்டனை கைது செய்ய முயன்ற போது, அவர் போலீசாரை தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. தற்காப்புக்காக போலீசார் இயக்கிய துப்பாக்கிச்சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்திலும் காவல்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.