திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற தெலங்கானா பக்தர் குத்திக்கொலை, 2 வாலிபர்கள் கைது..!

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற தெலங்கானா பக்தர் குத்திக்கொலை,  2 வாலிபர்கள் கைது..!

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற தெலங்கானா பக்தர் குத்திக்கொலை: 2 வாலிபர்கள் கைது...

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற தெலங்கானா பக்தர் சரமாரி குத்தி கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் யாதகிரி மாவட்டம் சவுண்டாரிபுரத்தை சேர்ந்தவர் வித்யாசாகர் (32). இவர் கடந்த 7ம் தேதி கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். மறுநாள் (8ம் தேதி) இரவு அண்ணாமலையார் கோயிலில் இருந்து கிரிவலம் புறப்பட்டார். கிரிவல பாதையில் மாநகராட்சி மருத்துவமனை அருகே ஒரே பைக்கில் வந்த 2 வாலிபர்கள், வித்யாசாகர் மீது மோதியுள்ளனர்.

இதை அவர் தட்டிக்கேட்டதால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் கத்தியால், வித்யாசாகரின் கழுத்தில் சரமாரி குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வித்யாசாகர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். தகவலறிந்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சென்று வித்யாசாகரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்றுமுன்தினம் வித்யாசாகர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது திருவண்ணாமலையை சேர்ந்த குகனேஸ்வரன் (22), தமிழரசன் (25) ஆகியோர் வித்யாசாகரை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். எதிர்பாராமல் நடந்த விபத்தின்போது ஏற்பட்ட தகராறில் வித்யாசாகர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வழிப்பறி முயற்சியில் கொலை செய்யப்பட்டாரா என அவர்களிடம் விசாரணை நடக்கிறது. கிரிவலம் வந்த பக்தர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்

மாருதி மனோ