1980 ல் தனது சித்தப்பாவை தோற்கடித்த செங்கோட்டையன் சித்தப்பாவை நான் தோற்கடிப்பேன். ! செங்கோட்டையனின் அண்ணன் மகன் பரபரப்பு பேட்டி. !

கோபிச்செட்டி பாளையம்

1980 ல் தனது சித்தப்பாவை தோற்கடித்த செங்கோட்டையன் சித்தப்பாவை நான் தோற்கடிப்பேன். ! செங்கோட்டையனின் அண்ணன் மகன் பரபரப்பு பேட்டி. !

கோபிசெட்டிபாளையம்: 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் கோபிச்செட்டிபாளையத்தில் எனக்கு போட்டியிட வாய்ப்பளித்தால் எனது சித்தப்பா செங்கோட்டையனை நான் தோற்கடிப்பேன் என அவரது அண்ணன் மகன் செல்வம் பரபரப்பு பேட்டியை அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கோபியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு வேளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் எனது பெயர் கோபி சட்டசபை தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் 1980 ஆம் ஆண்டு நடந்த சரித்திரம் மீண்டும் திரும்பும்.

அதாவது அப்போது செங்கோட்டையன் அவரது சித்தப்பாவை தோற்கடித்தார். நான் வரும் 2026 இல் எனது சித்தப்பா செங்கோட்டையனை தோற்கடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

அதாவது 1980 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் கே.ஏ.செங்கோட்டையன் 44,703 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.எம்.சுப்பிரமணியம் 29,690 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.

1980 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் செங்கோட்டையனிடம் தோல்வி அடைந்த சுப்பிரமணியம் வேறு யாருமில்லை, செங்கோட்டையனின் சித்தப்பா தான். இதைத்தான் செங்கோட்டையனின் அண்ணன் மகன் தற்போது தெரிவித்துள்ளார்.