கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர்.
கிருஷ்ணகிரியில் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளின் ஒன்றான சாம்பியன் ஷிப் போட்டிக்கான சிலம்பம் போட்டி நடைபெற்றது.
மாநில அளவில் இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த சிலம்பம் போட்டியில் தர்மபுரி, திருப்பத்தூர், ஒசூர், ஊத்தங்கரை, ஒசூர் என பல்வேறு இடங்களில் இருந்து 5 வயது முதல் 17 வயது வரையிலான வீரர், வீராங்கனைகள் என 1500 க்கும் மேற்பட்டவர்கள் இந்த சிலம்பம் போட்டியில் கலந்துக் கொண்டனர். தமிழர்களின் சிலம்பம் பள்ளி ஆசிரியர் கீர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த சாம்பியன் ஷிப் போட்டியை துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வயது அடிப்படையில் போட்டிகள் நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் தமிழர்களின் வீர விளையாடுக்களின் ஒன்றான சிலம்பம் போட்டியில் வீரர், வீராங்கனைகள் கலந்துக் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி விளையாடி வருகின்றனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெரும் வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையும் வழங்கப்பட உள்ளது.
மேலும் இந்தப் போட்டியில் வெற்றிப் பெறும் வீரர், வீராங்கனைகள் அடுத்து அகில இந்திய அளவில் நடைபெற உள்ள சிலம்பம் போட்டியில் தமிழகத்தின் சார்பாக கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த ஷாம்பியன்ஷிப் சிலப்பம் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ராம்போ கணேஷ், முகமது அலி, சிவா, மாதேஷ் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
