சூரண்குட்டை கிராமத்திற்கு கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு வந்த புதிய அரசு பேருந்து, மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு. !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள சூரண்குட்டை கிராமத்திற்கு கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு வந்த புதிய அரசு பேருந்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் பி.சி.சேகர் தலைமையில் கிராம மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், சூரண்குட்டை கிராமம் வழியாக பர்கூருக்கு அரசு பேருந்து வந்து கொண்டு இருந்தது, இந்த பேருந்தில் காட்டிநாயனப்பள்ளி, சமத்துவபுரம், காத்தாடிகுப்பம், எலத்தகிரி, ஒரப்பம், கந்திகுப்பம் என பல்வேறு கிராமங்களில் இருந்து நாள்தோறும் பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்களும் இந்த பேருந்தில் சென்று வந்தனர்.

தினமும் ஏராளமானவர்கள் இந்த அரசு பேருந்தில் பயணம் மேற்கொண்டு வந்த நிலையில் இந்த பேருந்து மிகவும் பழுதடைத்த நிலையில் காணப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதால் இந்த பேருந்திற்கு பதிலாக புதிய பேருந்து விட வேண்டும் என்று பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமின்றி கிராம மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தமிழக பழைய பேருந்திற்கு பதிலாக அரசு புதிய பேருந்து விட்டுள்ளது. இதனை அடுத்து புதிய பேருந்து கிருஷ்ணகிரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சூரண் குட்டை வழியாக பர்கூருக்கு சென்ற அரசு பேருந்திற்கு சூரண்குட்டை கிராமத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் பி.சி.சேகர் தலைமையில் கிராம மக்கள் மலர் துவி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அரசு பேருந்திற்கு கிராம மக்கள் மாலை அணிவித்தும், தேங்காய் மற்றும் பூசணிக்காய் உடைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள். பின்னர் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு மரியாதை செய்து பயணிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி, பேருந்திற்கு மலர் தூவி அனுப்பி வைத்தனர்.
அப்போது நீண்ட-நாள் கோரிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சூரண்குட்டை
ஊர் கவுண்டர் சினிவாசன், திமுக தொழிற்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திருமதி மாரம்மா சின்னசாமி மற்றும் சூரண்குட்டை கிராமத்தை சேர்ந்த மணி, நாகராஜ், சுந்தர். கனகராஜ், கோவிந்தன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
