சிவகங்கையில் நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள், பல உயிரிழப்பு மேலும் பலர் படுகாயம். !

சிவகங்கை

சிவகங்கையில் நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள், பல உயிரிழப்பு மேலும் பலர் படுகாயம். !

சிவகங்கை அருகே இன்று மாலை 4.30 மணியளவில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் பஸ்சில் இருந்த பெண்கள் 9 பேர், ஆண்கள் இரண்டு பேர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேருக்கு நேர் மோதிய அரசு பஸ்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்டம் நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட விவேகனந்தா பாலிடெக்னிக் கல்லூரி அருகே தான் இந்த விபத்து அரங்கேறியுள்ளது. காங்கேயத்தில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற (TN 39 N 0198) அரசு பேருந்தும், காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற (TN 63 N 1776) அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு காரைக்குடி அரசு மருத்துவமனை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுகு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் :

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ 3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரமும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.