இன்று பணி முடிந்து ஓய்வு பெறும் டிஎஸ்பி, கடைசி நாளில் பணியிடை நீக்கம் ஏன்?

திருப்பத்தூர்

இன்று பணி முடிந்து ஓய்வு பெறும் டிஎஸ்பி, கடைசி நாளில் பணியிடை நீக்கம் ஏன்?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சரக டிஎஸ்பி ஆக பணிபுரிபவர் விஜயகுமார். இவர் மீது துறை ரீதியாக பல்வேறு புகார்கள் வந்ததாக கூறப்படும் நிலையில் இன்று அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக இருந்தது.

இந்நிலையில் இன்று டிஎஸ்பி விஜயகுமார் அதாவது ஜூன் 30-ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக இருந்த நிலையில் தற்போது அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும் அவரை சஸ்பெண்ட் செய்வதற்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.