பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுமோசமான தோல்வி; மீண்டும் எழுந்த அகாலி தள்.!

பஞ்சாப்

பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுமோசமான தோல்வி; மீண்டும் எழுந்த அகாலி தள்.!

பஞ்சாப் மாநில உள்ளாட்சித் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக கட்சி படுமோசமான தோல்வியைத் தழுவி உள்ளது. அகாலி தள் கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு சவாலாக கடும் போட்டியை உருவாக்கி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நிலைகளிலான உள்ளாட்சித் தேர்தல்கள் டிசம்பர் 15-ந் தேதி நடைபெற்றன. இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ்- அகாலி தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மத்தியில் ஆளும் பாஜக கட்சி மிக மோசமான படுதோல்வியை சந்தித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, மொத்தம் உள்ள 347 மாவட்ட பஞ்சாயத்துகளில்

ஆம் ஆத்மி- 47
காங்கிரஸ்: 19
அகாலிதள் 17
இதர கட்சிகள்-3
பாஜக-1

இடங்களைக் கைப்பற்றி உள்ளன.

வட்டார சமிதிகளின் மொத்த எண்ணிக்கை 2838. இதில் முடிவுகள் அறிவிக்கப்பட்டவை 623.

ஆம் ஆத்மி: 416
காங்கிரஸ்: 83
அகாலி தள்: 74
இதர கட்சிகள்: 49
பாஜக 1
இடத்தையும் கைப்பற்றி உள்ளன.