பராசக்தி மேடையில் விஜய் பற்றி பேசிய ஜிவி பிரகாஷ்., ரவி மோகனின் பதிலடி.!

பராசக்தி

பராசக்தி மேடையில் விஜய் பற்றி பேசிய ஜிவி பிரகாஷ்., ரவி மோகனின் பதிலடி.!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட இந்த விழா, வெறும் இசை வெளியீட்டாக இல்லாமல், உணர்ச்சி, பாராட்டு மற்றும் அரசியல்-சமூக சிந்தனைகள் கலந்த ஒரு மேடையாக மாறியது.

ரவி மோகன் பேச்சு

நடிகர் ரவி மோகன் தனது பேசும்போது, சிவகார்த்திகேயனை மனமார பாராட்டினார். "நான் படம் பார்த்துவிட்டேன். ஹீரோவாக நடித்துள்ள படங்களைப் பற்றி அதிகம் பேச மாட்டேன். ஆனால் இது சிவகார்த்திகேயனின் 25வது படம். 'பராசக்தி' ஒரு தங்கம் போல உருவாகியிருக்கிறது. இந்த வெற்றிக்கு சிவகார்த்திகேயன் முழு தகுதியானவர். அவருக்குப் பின்னால் பெரிய சப்போர்ட் சிஸ்டம் இல்லை. அவருடைய உண்மையான பலம் ரசிகர்கள் தான்" என அவர் பேசினார்.

மேலும், "சிவகார்த்திகேயனை இன்னும் உயரத்திற்கு ரசிகர்கள் கொண்டு செல்ல வேண்டும்" என அவர் கூறியது, ரசிகர்களிடையே பெரும் கைதட்டலுக்கு காரணமாக அமைந்தது.

அதர்வாவின் உருக்கமான பேச்சு

நடிகர் அதர்வா பேசுகையில், "சிவகார்த்திகேயன் எனக்கு ஸ்கிரீனில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் ஒரு பிரதர். அவர் தனது குறிக்கோளை அடையும் வரை கடுமையாக உழைப்பவர். ஷூட்டிங்கில் எல்லோருக்கும் உணவு பகிர்ந்துவிட்டு, தானே சாப்பிடாமல் டயட்டில் இருப்பார். அந்த கட்டுப்பாடுதான் அவரை இங்கு கொண்டு வந்திருக்கிறது" என தெரிவித்தார்.

ஜிவி பிரகாஷ் உருக்கம்

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது 100வது படம் 'பராசக்தி' என்பதால் உணர்ச்சிவசப்பட்டார். "20 வருட பயணத்தில் 100வது படம். முதல் படம் ஷங்கர் சார் தயாரிப்பு, 50வது படம் விஜய் சார், 100வது படம் சிவகார்த்திகேயன் சார். இந்த படத்தின் முழு வீரியம் ட்ரெய்லர் வெளியானபோது தெரியும். அதை நாங்கள் இன்னும் சில விஷயங்களை ஒழித்து வைத்திருக்கிறோம்" என அவர் கூறினார்.

ஸ்ரீலீலா பாராட்டு

நடிகை ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயனின் மனிதநேயத்தைப் பற்றி பேசினார். "அவர் சாதாரண ஸ்வீட் இல்லை, ஒரு பாயாசம். ரசிகர்களுடன் சலிக்காமல் போட்டோ எடுத்துக் கொள்வது அவருடைய உண்மையான சுவீட்னெஸ். இந்த படத்தில் எனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு பெருமை" என கூறினார்.

அருண் விஷ்வா

தயாரிப்பாளர் அருண் விஷ்வா, "1952ல் வெளியான 'பராசக்தி' தமிழக அரசியலில் ஒரு பெரிய குரலாக இருந்தது. அதேபோல், இந்த 'பராசக்தி' இந்த தலைமுறைக்கு மொழி, மாநிலம், போராட்டம் குறித்து வலுவான கருத்தை கொண்டு செல்லும்" என கூறியது விழாவின் முக்கியமான தருணமாக அமைந்தது.

எதிர்பார்ப்பை உயர்த்திய இசை விழா

மொத்தத்தில், 'பராசக்தி' இசை வெளியீட்டு விழா வெறும் சினிமா நிகழ்ச்சியாக இல்லாமல், சிவகார்த்திகேயனின் 25வது படத்தை கொண்டாடும் ஒரு நினைவிடமாகவும், சமூக-அரசியல் சிந்தனைகளை நினைவூட்டும் மேடையாகவும் மாறியது. விழாவில் பேசிய ஒவ்வொரு பிரபலங்களின் வார்த்தைகளும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

'பராசக்தி' திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன், அடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.