த .வா.க. மாவட்ட செயலாளர் கொலையில் பா.ம.க. மாவட்ட செயலாளர் உட்பட 4 பேரன் சரணடைந்தனர். ! பழிக்குப் பழி என வாக்குமூலம். !
புதுச்சேரி

புதுச்சேரி: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கல் மாவட்டச் செயலாளர் மணிமாறன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், பாமக காரைக்கால் மாவட்டச் செயலாளர் உள்பட 4 பேர் சரண் அடைந்துள்ளனர்.
பாமக காரைக்கால் மாவட்டச் செயலாளர் பிரபாகரன் உள்பட 3 பேரிடமும் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
காரைக்கால் திருநள்ளாறைச் சேர்ந்தவர் மணிமாறன் (32). தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளரான இவர், மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர், பிற்பகலில் காரில் காரைக்கால் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். செம்பனார்கோவில் காலஹஸ்தினாதபுரம் பகுதியில் உள்ள பள்ளி அருகே சென்றபோது, பின்னால் 2 கார்களில் வந்த சிலர், அவரது காரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.
பின்னர் கார் கண்ணாடியை உடைத்து மணிமாறனை வெளியில் இழுத்துப் போட்டு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு, அவர்கள் வந்த கார்களில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். தகவலறிந்து வந்த செம்பனார்கோவில் போலீசார் மணிமாறனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் பாமக காரைக்கால் மாவட்ட செயலாளராக இருந்த தேவமணி கொலைக்கு பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்ததாக தகவல் வெளியானது.
மணிமாறனின் கொலையில் சிலர் மீது சந்தேகம் உள்ளது எனவும் அவரது அண்ணன் காளிதாசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் காரைக்கால் பகுதியை சேர்ந்த தேவமணியின் மகன்கள் பிரபாகரன், அருள் குமார், தேவமணியின் மைத்துனர் ராமமூர்த்தி மற்றும் புருசோத்தமன், முட்டை முருகன் என்ற ஐந்து பேர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராக இருந்த தேவமணி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மணிமாறன் முக்கியக் குற்றவாளியாக இருந்தார். தற்போது அவர் ஜாமீனில் வந்திருந்தார். எனவே, அந்தக் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் வகையில் இந்தக் கொலை நடந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கல் மாவட்டச் செயலாளர் மணிமாறன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், பாமக காரைக்கால் மாவட்டச் செயலாளர் பிரபாகரன் உள்பட 4 பேர் சரண் அடைந்துள்ளனர். பாமக மாவட்டச் செயலாளர் பிரபாகரன் உள்பட 3 பேரிடமும் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.