அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் ரூ.8.45 கோடி நலத்திட்ட உதவிகள். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் டாக்டர்.B.R.அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் தாட்கோ மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி நகராட்சி, மீனாட்சி மஹாலில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 8.45 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்., MLA, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான, ஓசூர் சட்டமன்ற உறுப்பினருமான Y.பிரகாஷ்., MLA ஆகியோர் வழங்கினர்.

உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர,பேரூர் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ.
