மேலகரம் பேரூர் திமுக சார்பில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!
தென்காசி
மேலகரம் பேரூர் திமுக சார்பில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தென்காசி டிச 06
தென்காசி மாவட்டம் நன்னகரத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு அவரது 70 வது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அறிவுறுத்தலின் பேரில், மேலகரம் பேரூர் திமுக செயலாளர் சுடலை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் வேலுச்சாமி அவைத் தலைவர் சலீம் ஒன்றிய பிரதிநிதி நன்னை பாலு வார்டு செயலாளர்கள் பாலசுப்பிரமணியன் குருசாமி குத்தாலிங்கம் கழக பேச்சாளர்கள் இஸ்மாயில்
ஆயிரப்பேரி முத்துவேல் மற்றும் நன்னை மாரி பகவதி ராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
