பூங்குருத்தி கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் விவசாயம் செய்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள மேல் பூங்குருத்தி கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் விவசாயம் செய்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மேல் பூங்குருத்தி கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வரும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் சட்ட ஆலோசகர் கண்ணையா தலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாய சங்கத்தினை சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர்கள் கோவிந்தராஜ், சீனிவாசன், ஒன்றிய தலைவர் முனிரத்தினம், இளைஞர் அணி பொது செயலாளர் அனுமந்தராசு, மாவட்ட தலைவர் வரதராஜன், ஒன்றிய துணைத் தலைவர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக மேல் பூங்குருத்தி கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் ஏழை விவசாயிகள் கடந்த 100 ஆண்டுகளுக்கு விவசாயம் செய்து வரும் இவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்,

கேரளா கர்நாடகா, தெலுங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பட்டா நிலத்தில் பாம்பு கடித்து இறந்து போனால் அந்த மாநில அரசுகள் நிவாரணம் வழங்கி வருகிறது, அது போன்று தமிழகதிலும் பாம்பு கடித்து இறந்து போனால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்,
கடந்த மூன்று ஆண்டுகளாக மா விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் டன் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் விலை நிணையம் செய்ய வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவினை பர்கூர் வட்டாட்சியரிடம் மாநில தலைவர் ராமகவுன்டர் வழங்கினார்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இராம கவுண்டர்......
மேல் பூங்குருத்தி கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் இவர்களுக்கு சாலை வசதி, மின்சார வசதி, குடி நீர்வசதி, பள்ளி கூடம், ரேசன் கடை, கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தமிழக அரசு செய்து கொடுத்து உள்ளது.
ஆனால் வனப்பகுதி இல்லாத அரசு புறம் போக்கு நிலத்தில் விவசாயம் செய்து வரும் இவர்களுக்கு, இது வரை பட்டா வழங்காமல் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் இனியாவது தமிழக அரசு இவர்களுக்கு பட்டா வழங்க முன்வர வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ
