கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்கம். "

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்கம். "

கிருஷ்ணகிரி மாவட்டம்,  கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், நுகர்வோர் விழிப்புணர்வு நலச் சங்கம், ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியின் பேராசிரியர் உமாராணி பொறுப்பு முதல்வராக, தலைமை ஏற்று நடத்தினார். 

நாட்டு நல பணி திட்ட அலுவலர் பேராசிரியர்.திருமதி கனகலட்சுமி அவர்கள் முன்னிலையில் ஏறக்குறைய 2500 மாணவிகளுக்கும் , பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில் , தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் கணேசன் குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் பூவிதன், சென்னை அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், நுகர்வோர் விழிப்புணர்வு நலச் சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் பயிற்சி இயக்குனர் எஜி.ஜாய் உள்ளிட்டோர் விழிப்புணர்வு தேர்தல் பிரச்சார கருத்தரங்கை பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்வில் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் அவர்கள் முதல்முறையாக தேர்தலில் பங்கேற்க கூடிய மாணவியர்களுக்கு தங்களுடைய வாக்குரிமை செலுத்த அடையாள அட்டை பதிவு செய்யும் விண்ணப்ப படிவத்தை வழங்கியும் , வருகிற நாட்களில் குறிப்பிட்ட முகாம்களில் தங்களுடைய பெயரை பதிவு செய்து வாக்காளர் அடையாள அட்டை பெறவும் வழி வகை செய்து விளக்கம் அளித்து பேசினார் . குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் அவர்கள் டிசம்பர் -24 தேசிய நுகர்வோர் தின விழா என குறிப்பிட்டு துறை சார்ந்த தகவல்களை பேசினார்..

இதனைத் தொடர்ந்து நுகர்வோர் விழிப்புணர்வு நலச் சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் பயிற்சி இயக்குனர் திரு.ஏஜி.ஜாய் அவர்கள் பேசுகையில்....
இந்திய அரசியல் சாசனம், பிரிட்டிஷ் இந்தியாவின் வருகை மற்றும் சட்ட வடிவு நிலைகள் 1773 -முதல் தொடங்கிய ஒழுங்குமுறை சட்டம், 1784-பிட்ஸ் சட்டம், 1793,1813,1833-பட்டய சட்டங்கள் 1958-இந்திய அரசு சட்டம் -1861 இந்திய கவுன்சில் சட்டம்- 1892 இங்கே கவுன்சில் சட்டம் -1909 இந்திய கவுன்சில் சட்டம்- 1915 இந்திய கவுன்சில் சட்டம் -1919, சைமன்-கமிஷன், இந்திய அரசு சட்டம்-1935, ஆகஸ்ட் அறிவிப்பு- 1940, கிரிப்ஸ் மிஷின்- 1942 மவுண்ட் பேட்டன் திட்டம், இந்திய சுதந்திர சட்டம் -1947 அரசியல் நிர்ணய சபை- 1946, அரசியல் சாசனம் 1950 ஜனவரி 30 ஆம் நாள் நடைமுறை மற்றும் தேர்தல் ஆணைய முறைகள் குறித்த விளக்கங்களை பேசினார்.

இதனைத் தொடர்ந்து சென்னை அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசுகையில்,  இன்றைய தேர்தல் காலங்கள் மிகவும் முக்கியமான ஜனநாயக கடமையை ஆற்றக்கூடிய ஒரு பெரிய உரிமையோடு, கடமையும், பொறுப்பும் கொண்டதாகும். நமது வாக்குகள் விற்பனைக்கு அல்ல..... என் ஓட்டு விற்பனைக்கு அல்ல... என்ற பிரச்சார முழக்கங்களும், வாசகங்களும், உறுதிமொழிகளும் கூறி, நம்முடைய நாட்டில்  ஊழல், லஞ்சம், ஒளிவு மறைவான நிர்வாகம்,  இன பாகுபாடு அதிகார துஷ்பிரயோகம் போன்ற நிலைப்பாடுகளில், மக்கள் விழித்துக் கொண்டு தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றும் பொழுது நல்ல ஆட்சியாளர்களையும் , தன் சுயநலத்திலல்லாத ஆட்சியாளர்களையும் தீர்மானித்து வாக்குக்கு பணம் பெறுவதும் , கொடுப்பதும் குற்றம்- அது சட்டப்படி சிறை தண்டனைக்கு உள்ளாக கூடியதை சுட்டிக்காட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இதனை தொடர்ந்து மாணவிகள் உற்சாகத்துடன் தங்களுடைய வாக்குரிமை குறித்த உள்வாங்குதல் மற்றும் தகவல் பகிர்வுகளை கேட்டு அறிந்து அவற்றை நடைமுறைப்படுத்தவும், வருகிற நாட்களில் தங்களுடைய நண்பர்களுக்கு, குடியிருப்பு பகுதிகள் வரைப்படுத்துவோம் என பிரச்சாரம் செய்து வாக்குக்கு பணம் வாங்காத நிலையை ஏற்படுத்துவோம் என்ற உறுதிமொழியுடன் கூட்டம் நிறைவானது.

செய்தியாளர் 

மாருதி மனோ