தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் உழவர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் .!

கிருஷ்ணகிரி

தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் உழவர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் .!

கிருஷ்ணகிரியில் தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் உழவர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த மத்திய அரசு நிபந்தனைகள் இன்றி விவசாய விலைப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உழவர் தினபேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது,

கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில் இருந்து துவங்கிய இந்த உழவர் தின பேரணி நகரின் முக்கிய சாலை வழியாக சென்று புதிய பேருந்து நிலையம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில்  முடிவடைந்தது,

பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விவசாயிகளை கோரிக்கைகளை 
வலியுறுத்தி வீரமரணம் அடைந்த விவசாயிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது

தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் தலைமையில் நடைபெற்ற இந்த  பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணைச் செயலாளர் அனுமந்த ராஜ், மேற்கு மாவட்ட பொருளாளர் சுப்ரமணிய ரெட்டி, மேற்கு மாவட்ட தலைவர் வண்ணப்பா, மாவட்ட மகளிர் தலைவி பெருமா, மா நர்சரி உரிமையாளர் சங்க தலைவர் கன்னையா, மத்திய மாவட்ட தலைவர் வேலு, மாவட்ட துணை தலைவர் வரதராஜன், மாவட்ட இளைஞரணி தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
மேலும் இந்த பொதுக்கூட்டத்திற்கு தென் இந்திய விவசாய சங்கத்தின் தலைவர் நரசிம்மம் நாயுடு, கர்நாடகா விவசாய சங்க தலைவர் கரும்பூர் சாந்தகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்,

மேலும் இத்தககூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ரங்குதாஸ், மாவட்ட பொருளாளர் அசோக்குமார், மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சார்ந்த மாரியப்பன், ஜெயலட்சுமி, முனிரத்தினம், சின்னசாமி, ராமப்பா, ரவி, ஜோதி கண்ணன், சந்திரசேகர், தேவேந்திரன், கோவிந்தராஜ், கோவிந்தசாமி, ராஜேந்திரன், நாகராஜன் ரெட்டி, கண்ணப்பன், முருகேசன், ராஜீவ் காந்தி, திம்மராயன், ரஞ்சித் குமார், செல்வராஜ், ராதாகிருஷ்ணன், நூர்துசாமி, வீராசாமி, குப்பையன், கமலக்கண்ணன், காவேரி, சம்பத்குமார், மஞ்சுநாத் ரெட்டி, நந்திஸ், வெங்கடேஷ், மாதப்பன், தமிழரசன், மணிவண்ணன், கார்த்திக், கிருஷ்ணப்பா, தியாகராசு, சோமு, நாகராஜ், வள்ளி, பாலம்மா, பத்மா, முனுசாமி, பூபதி, செந்தில்குமார், நாகராஜ் ,சரவணகுமார், லட்சுமணன், ராஜா, முருகன், மாசிலாமணி, குமார், சுப்பிரமணி, பழனி, அருள், சின்ராஜ், பெருமாள், ஜெயராமன், சின்னப்பன், தேவராஜ், குருமூர்த்தி,  கனகராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த கூட்டத்தில்..... 
இந்தியா விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலை பொருட்கள் எந்தவித நிபர்ந்தனைகள் இன்றி மத்திய அரசு ஏற்றுமதி செய்யவேண்டும், தெலுங்கானா அரசு போல் ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு போகத்திற்கும் வழங்குவது போல் தமிழகத்திலும் வழங்கிட வேண்டும், ஒகேனக்கல் ஆற்றில் வீணாக போகும் தண்ணீரை தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு பெரிய மின் மோட்டார் மூலம் நீர் ஏற்றி விவசாயத்திற்கு வழங்கிட வேண்டும், 

ஆந்திராவில் மா விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்குவது போல் தமிழகத்தில் உள்ள மா விவசாயிகளுக்கும் உற்பத்தி மானியம் வழங்கிட வேண்டும், மத்திய அரசு தேசிய வங்கி கடன்களையும் ,தமிழக அரசு கூட்டுறவு கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும், வேளாண் சார்ந்த மின்சாரத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவதோடு 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் 

ஆழியாளம் திட்டத்தினை150 அடிக்கு உயரத்திற்கு அணை கட்டி விவசாயிகளின் சாகுபடிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட வேண்டும், மத்திய அரசு விவசாய விளை பொருட்களை இறக்குமதிக்கு தடைவிதித்து விவசாயிகளின் விலைப்பொருள்களை ஏற்றுமதிக்கு உண்டான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்....
உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.

செய்தியாளர்

மாருதி மனோ