சூரன்குட்டை மாரியம்மன் திருக்கோவில் சத்தி மாலை அணியும் விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள சூரன்குட்டை மாரியம்மன் திருக்கோவில் சத்தி மாலை அணியும் விழாவில் கலந்து கொண்ட ஶ்ரீ பிரவாணந்தபுரி மஹா சுவாமிக்கு கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு.
கிருஷ்ணகிரி அருகே உள்ள சூரண் குட்டை கிராமத்தில் அமைந்துள்ள கிராம தேவதையான ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் சத்தி மாலை அணியும் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு கர்நாடகா மாநிலம் சிவானாபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீ ஆதிசத்திமஹா சமாஸ்தான மடத்தின் ஸ்ரீ பிரவானந்தபுரி மஹா சுவாமிகள் வருகை தந்தார்.

அவருக்கு சூரன்குட்டை கிராமத்தை சேர்ந்த ஊர் கவுண்டர்கள் மற்றும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் பி.சி.சேகர் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீமாரியம்மனுக்கு ஸ்ரீபிரவானந்தபுரி மஹா சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ பிரவானந்தபுரி மஹா சுவாமிகள் சக்திகளுக்கு மாலை அணிவித்து அருளாசி வழங்கினார். இந்த சக்தி மாலை அணியும் விழாவில் சூரன்குட்டை, வெண்ணம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமானவர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
