வெனிசூலா நாட்டின் 'Acting President' ஆக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் .??
அமெரிக்கா
வெனிசூலா நாட்டின் 'Acting President' ஆக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தம்மை பிரகடனப்படுத்தி கொண்டுள்ளாரா?
என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இயற்கை வளம், எண்ணெய் வளம் மிக்க வெனிசூலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து நாடு கடத்திச் சென்றது.
தற்போது நியூயார்க் சிறையில் நிக்கோலஸ் மதுரோ அடைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக சீனா, வடகொரியா, ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சமூக வலைதளப் பக்கத்தில், வெனிசூலாவின் 'Acting President' என டொனால் டிரம்ப் குறிப்பிட்டிருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
