தென்காசி மாவட்ட திமுக அலுவலகத்தில் அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சி .!
தென்காசி
தென்காசி மாவட்ட திமுக அலுவலகத்தில் அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சி
தென்காசி, டிச - 06
தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 70-வது நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அலங்கரிக்கப்பட்ட
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி செயலாளர் சுரண்டை முத்துக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் கென்னடி, ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், ஜெயா, மேலகரம் பேரூர் கழக செயலாளர் சுடலை, திமுக பேச்சாளர் ஆயிரப்பேரி முத்துவேல், வல்லம் செல்வம், ராமராஜ், முத்து சுப்பிர மணியன் அழகப்ப புரம் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
