குற்றாலம் காவல் நிலையத்தில் திமுக மேலகரம் பேரூர் செயலாளர் சுடலை, பாஜக நிர்வாகிகள் மீது புகார் மனு .!

தென்காசி

குற்றாலம் காவல் நிலையத்தில் திமுக மேலகரம் பேரூர் செயலாளர் சுடலை, பாஜக நிர்வாகிகள் மீது புகார் மனு .!

குற்றாலம் காவல் நிலையத்தில் திமுக மேலகரம் பேரூர் செயலாளர் சுடலை, பாஜக நிர்வாகிகள் மீது புகார் மனு 

தென்காசி நவ 21

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலனை அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க  கோரி குற்றாலம் காவல் நிலையத்தில், மேலகரம் பேரூராட்சி திமுக செயலாளர் சுடலை தலைமையில் திமுகவினர் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது,நான் மேலகரம் பேரூர் கழக செயலாளராக உள்ளேன். 1வது எதிரி எங்கள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் மீது அவர் கூறிய கருத்துக்களை திரித்துக் கூறி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். எங்கள் கட்சிக்கும், மாவட்ட செயலாளருக்கும், அவ மரியாதை செய்து பதிவிட்டுள்ளார். 

இது சமூகத்தில் பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் உள்ளதாலும், மேலும் 18-11-2025 இரவு நேரத்தில் காவல் துறை அனுமதி இன்றி எங்கள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் உருவப்படத்தை எரித்து நான்கு எதிரிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தி அவதூறு பேசினர்.

ஆர்ப்பாட்டம் செய்த எதிரிகள் மீது தக்க சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந் நிகழ்வில் மேலகரம் பேரூராட்சி துணை செயலாளர் ஜீவானந்தம், கவுன்சிலர்கள் சுந்தரம்,கபிலன், பொருளாளர் ரமேஷ், நன்னைபாலு, குடியிருப்பு கணேசன்,பாலசுப்பிரமணியன், மாரியப்பன், காசி விஸ்வநாதன், குருசாமி, விக்கி, பகவதி ராஜ், குத்தாலிங்கம், குமாரவேல், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

AGM கணேசன்