தென்காசியில் இந்திய தொழிற் சங்க மையம் (சி ஐ டி யு ) மாநாடு .!
தென்காசி

தென்காசியில் இந்திய தொழிற் சங்க மையம் (சி ஐ டி யு ) மாநாடு
தென்காசி செப் 08
தென்காசி குத்துக்கல் வலசை தனியார் திருமண மஹாலில் வைத்து இந்திய தொழிற்சங்க மையம் (சி ஐ டி யு) தென்காசி மாவட்ட மாநாடு நடைபெற்றது..
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அயூப் கான் தலைமை வகித்தார். வரவேற்பு குழு தலைவர் மாரியப்பன் வரவேற்புரை ஆற்றினார், மாவட்ட துணை தலைவர் ராஜசேகரன் கொடியேற்றி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் வன்னிய பெருமாள் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.
மாநாட்டின் துவக்க உரையினை மாநில செயலாளர் சி ஐ டி யு ராஜேந்திரன் வழங்கினார்.வேலை மற்றும் ஸ்தாபன அறிக்கையினை மாவட்ட செயலாளர் மணிகண்டன் வாசித்தார்.
வரவு செலவு அறிக்கையினை மாவட்ட பொருளாளர் தர்மராஜ் வாசித்தார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் கணபதி, குணசீலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாநில துணை தலைவர் மகாலட்சுமி நிறைவு உறையாற்றினார்.
இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் வரவேற்பு குழு பொருளாளர் லெனின் குமார், மாவட்ட நிர்வாகிகள் ராஜசேகரன், ரத்தினம், சின்னச்சாமி, கருப்பசாமி, குருசாமி, மணிகண்டன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வரவேற்பு குழு செயலாளர் பட்ட முத்து நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்