அரசு மாதிரிப்பள்ளியில், ஓசூர் டைட்டன் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ், ரூ.1 கோடியே 15 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறைகள்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அரசு ஆசிரியர் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும், அரசு மாதிரிப்பள்ளியில், ஓசூர் டைட்டன் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ், ரூ.1 கோடியே 15 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., திறந்து வைத்தார்.

உடன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.மதன் குமார்,டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் தலைமை நிலைத்தன்மை அலுவலர் ஸ்ரீதர், டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் CSR தலைவர் மேஜர்.ஜெ.ஜெ.டொமினிக், மாதிரிப்பள்ளி தலைமை ஆசிரியர் வெ.சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
