கல்லூரியில் படிக்கும் போதே ஆண் நன்பருடன் வீடுவாடகைக்கு எடுத்து தங்கிய மாணவி இருவரும் சண்டையிட்டு பிரிந்த நிலையில் வழக்கறிஞர் நன்பரை அனுப்பி தாக்குதல்.!

சென்னை

கல்லூரியில் படிக்கும் போதே ஆண் நன்பருடன் வீடுவாடகைக்கு எடுத்து தங்கிய மாணவி இருவரும் சண்டையிட்டு பிரிந்த நிலையில் வழக்கறிஞர் நன்பரை அனுப்பி தாக்குதல்.!

கல்லூரியில் படிக்கும் போதே ஆண் நன்பருடன் வீடுவாடகைக்கு எடுத்து தங்கிய மாணவி இருவரும் சண்டையிட்டு பிரிந்த நிலையில் வழக்கறிஞர் நன்பரை அனுப்பி தாக்குதல்

நாண்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர்

சேலம் மாவட்டத்தைச் சார்ந்த ஹரிஹரன் (வயது 21) சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் அதே கல்லூரியில் பிபிஏ படிக்கும் மாணவியும் சேர்ந்து பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீராம் கேட்வே என்னும் பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கல்லூரியில் படித்து வந்துள்ளனர்.. 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இளம் பெண்ணுக்கு ஹரிஹரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் சண்டை போட்டுவிட்டு காட்டாங்குளத்தூர் பகுதியில் தனது தோழிகளின் அறையில் தங்கியுள்ளார்.

மேலும் தனது தோழிகளிடம் தனது பொருட்கள் பெருங்களத்தூரில் உள்ள ஹரிஹரன் அறையில் இருப்பதாகவும் அதை எடுக்கப் போனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்படும் என்பதால் எடுக்க முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்..

 உடனடியாக அதற்கு ஒன்றும் கவலைப்படாதே நமது கல்லூரியில் சீனியர் ஒருவர் இருக்கிறார் அவர் இப்பொழுது வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார் அவரிடம் கூறினால் சிறப்பாக உன்னுடைய பொருள்களை எடுத்து தந்து விடுவார் என ஆலோசனை கூறியுள்ளனர்..

 இதன் அடிப்படையில் எஸ்ஆர்எம் கல்லூரியின் முன்னாள் மாணவரான தாம்பரம் பகுதியைச் சார்ந்த சந்தோஷ் (வயது 27 ) என்பவரிடம் தெரிவித்துள்ளனர் உடனடியாக களத்தில் இறங்கிய சந்தோஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த ஹரிஹரன் அறைக்கு சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கிச்சனில் இருந்த தோசை தவா எடுத்து ஹரிகரன் தலையில் அடித்து அடித்ததோடு இளம்பெண்ணின் பொருள்களுக்கு பதிலாக  அவர் கழுத்தில் அணிந்திருந்த  இரண்டு சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர்...

 இரத்த காயங்களுடன் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்ற ஹரிஹரன் இது தொடர்பாக பீர்க்கங்கரனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் விசாரணையை துவங்கிய காவல்துறையினர் தாம்பரம் பகுதியைச் சார்ந்த சந்தோஷம் காவல் நிலையம் அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்...

 விசாரணையில் சந்தோஷத்தின் நண்பர்களான  பீர்க்கங்கரணை பகுதியைச் சார்ந்த விஸ்வேஸ்வர் வயது 21 கூடுவாஞ்சேரி பகுதியைச் சார்ந்த ஷரீப் வயது 25 பெரம்பலூர் பகுதியைச் சார்ந்த  ராஜா வயது 21 ஆகிய நான்கு பேரும் சென்று ஹரிஹரன் இடம் இளம் பெண்ணின் பொருள்களை கேட்டதாகவும் அப்படி எதுவும் இங்கு இல்லை என ஹரிகரன் கூறியதால் அவரை தாக்கி விட்டு அவர் கழுத்தில் அணிந்து இருந்த தங்கச் சங்கிலியை பறித்ததாகவும் ஒப்புக்கொண்டனர்..

 அதன் அடிப்படையில் இரண்டு சவரன் தங்கச் சங்கிலி மீட்கப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்

         S S K